தமிழகத்தில் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

டெல்லி, 17 ஜூன் 2021

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகள் எதற்கு? என்று கோஷமிட்ட திரு ஸ்டாலின். தான் முதல்வராக பதவியேற்ற பின் அதே ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளைத் திறந்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மக்கள் மனதில் நம்பிக்கை அளிக்கும் தேவாலயங்களும், மத வழிபாட்டு தலங்களும் பூட்டியிருக்கும் போது மதுபான கடைகள் திறந்து இருப்பது வேதனை வேதனைக்குரிய செயலாகவே பார்க்கப்பட்டது.

பல்வேறு ஒழுக்க சீர்கேடுகளுக்கு ஆணிவேர் மதுதான். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தினமும் நடக்கும் கணக்கில்லா குற்றங்கள் மற்றும் பல குடும்பங்கள் நொறுங்கிப் போக காரணமாயிருப்பதும் மதுதான். இத்தகைய மதுக்கடைகளை அரசே நடத்துவது ஆபத்தானது. மதுக்கடைகள் ஒருவரின் மனநிலை, உடல் நிலையை மட்டுமல்ல, நாளை நாட்டின் நிலையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்பதை மனதில் உணர்ந்து ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவரும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பல ஜெபித்து வருகின்றனர். பல்வேறு தருணங்களில் தமிழக அரசிடம் கோரிக்கைகளையும் வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்து பாதுகாக்கும் வகையில், மதுபான கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலாக உள்ளது.

அதேநேரம் இந்த அறிவிப்பானது அறிவிப்பு பட்டியலில் மட்டும் இல்லாமல் விரைவில் நடைமுறைக்கு வர நாம் அதிகமாய் ஜெபிக்க வேண்டும்.

நம் தேசத்தில் பூரண மதுவிலக்கை காணும் வரை நம் ஜெபத்தில் தொய்வு ஏற்பட வேண்டாம். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கருத்துரை பக்கத்தில் பதிவு செய்யுங்கள். இந்த நல்ல செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம். நன்றி.