
M. K. Stalin அவர்களுக்கு…
மத சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டுள்ள தேசத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் கருத்துப்பதிவு தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமானால், சதா எதிர்வினை ஆற்றுவதையும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்கள் ஒருமைப்பாட்டை குலைப்பதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணணி இயக்கத்தைச் சேர்ந்த யாரானாலும் அவர்கள் மேலும் நடவடிக்கை எடுப்பது உங்கள் தார்மீகப் பொறுப்பல்லவா?
அப்படிச் செய்யாத பட்சத்தில் அனைவருக்கும் ஒரே உரிமையை வழங்குவதன் மூலம் நீங்கள் பாரபட்சம் இல்லாதவர் என்பதை நிரூபியுங்கள்.
மதப்பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு நீங்கள் அடிபணிவதன் மூலம் நீங்கள் உங்களை பெலவீனப்படுத்திக் கொள்ளுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கிறிஸ்தவர்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பாக இருப்போம் என்று நீங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுங்கள்.
ஆங்காங்கே அமைதியான முறையில் நடைபெற்று வரும் மத வழிபாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் மத ரீதியிலான சிறு சிறு பிரச்சனைகளையும் கருத்து மோதல்களையும் உருவாக்குவதன் மூலம் உங்களுடைய உறுதியைத்தான் மதப்பிரிவினைவாத அமைப்புகள் சோதிக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு சாராருக்கு எதையும் செய்யவும் பேசவும் சுதந்திரமும், மற்றொரு சாராருக்கு கட்டுப்பாடுகளும், பயமுறுத்தல்களும், அடக்குமுறை நடவடிக்கைகளும் தான் உங்கள் போக்கு என்றால் அதனை தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் நலனுக்காகவும், தமிழகத்தில் நல்லாட்சிக்காகவும் அனுதினமும் கர்த்தரிடம் ஜெபிக்கும் பல லட்சோப லட்சம் கிறிஸ்தவ மக்களின் சார்பாக இந்தப் பதிவு…
John Vincely T R