இன்று ஆலய கட்டடம் என்பது தவிர்க்க இயலாதது. எப்படியாகிலும் சபை அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் நிர்பந்திக்க படுகிறோம். பிரச்சனை இல்லாத பட்சத்தில் ஒன்றும் இல்லை அதினால் தான் சில இடங்களில் அனுமதியே இல்லாமல் கட்டடங்கள் கட்டி, நாம் வருகிறது போல பார்க்கலாம் என்று ஆராதிக்கிறவர்கள் உண்டு. பிரச்சனை என்று வரும் போது நாம் கவனமாக இருக்க இந்த பதிவு உதவி செய்யும் என்று கர்த்தர் நாமத்தில் விசுவாசிக்கிறேன்.
A. முதலாவது அதற்குரிய சமயத்தை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
தரிசனம் ஏற்ற காலத்தில் நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால் அந்த சமயத்தை அறிந்து செயல்படுவது மிகவும் முக்கியம். பிறர் ஆலயம் கட்டுகிறார்கள், மாட்சிமை வெளிபடுத்த வேண்டும் என்பதற்காக தீர்மானம் எடுக்காமல், தேவை அறிந்து கர்த்தர் வார்த்தை படி, அதற்குரிய உணர்வை கர்த்தரிடம் பெற்று, அதை ஜெபத்தில் உறுதி படுத்தி அதற்குரிய நேரத்தை அறிந்து செயல் பட்டால் அவர் கிருபை நம்மோடு இருந்து காரியங்கள் நடப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் ஒரு சமயம் காலம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
B. நிச்சயம் அனுமதி வாங்க வேண்டும் என்பதில் எந்த கருத்து முரன்பாடு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
நெகேமியா மற்றும் எஸ்ரா போன்றவர்கள் தங்கள் காலத்து ராஜாக்கள் அனுமதி பெற்று தான் ஆலயம் கட்டவும், பழுது பார்க்கவும், அதற்குரிய சகல அனுமதியையும் பெற்று தான் ஜெருசலேம் வந்து தங்கள் பணியை செய்தனர். சிலர் ஆலயம் கட்டுவதற்கு முன்னரே எல்லா நிலைகளில் தங்கள் ஆலய கட்டட திட்ட அனுமதி பெற்று பின்னர் தங்கள் வேலைகளை முறைப்படி தொடங்குவார்கள். பிறர் விசுவாசத்தில் துவங்கி பின்னர் அனுமதி வாங்குவார்கள் அது நமது அரசாங்கத்தை பொறுத்து சில சூழல்களில் சாத்தியம் ஆனால் எப்பொழுதும் அது சாத்தியம் என்று அறுதி இட்டு கூற முடியாது. ஆனால் திட்ட அனுமதி வாங்கி முறைப்படி, அதற்குரிய வழிகளை கையாண்டு நேர்த்தியாக செய்வது தான் நல்லது. பெரிய செல்வாக்கு உள்ள சபைகளுக்கு அது ஒரு பிரச்சனையாக இருக்க வாய்ப்பு இல்லை, கர்த்தருடைய கிருபையின் அளவின் படி, எண்ணிக்கையின் அடிப்படையில் மற்றும் அதிகார செல்வாக்கு மூலம் அவைகளை எளிதில் பெற்று விடலாம்.
ஆனால் கிராமங்கள் மற்றும் இதர பகுதிகளில் அந்த அந்த திட்ட அதிகார நிலைகளுக்கு ஏற்று அவர் அவரது கிருபைக்கு ஏற்றவாறு செயல் படுவது அவசியம். அப்படி அனுமதி இன்றி கட்டியதினால் கவலை பட வேண்டாம். தொடர்ந்து நடக்க வேண்டியதை பாருங்கள். சபை கட்டடங்கள் மட்டுமன்றி எத்தனையோ கட்டடங்கள் திட்ட அனுமதி இன்றி தான் கட்டப் பட்டு இருக்கிறது. இந்தியாவில் இது தற்போது வரை சாத்தியம். எனவே பிரச்சனை வரும் போது சந்திக்க வேண்டிய அதிகாரம், கிருபை, தைரியம் மற்றும் விசுவாசம் மட்டும் இருந்தால் போதும். பிரச்சினை உள்ளவர்கள் இந்த அனுமதி காரியங்களை எப்போதும் பிரபலப்படுத்தாதபடி ரகசியமாக மேற்கொண்டு காரியங்களை நடத்தி முடியுங்கள். நேகேமியா ரகசியமாக தான் அலங்கத்தை மீள்பார்வை செய்தார். இந்த லாக் down காலம் ஒரு சூப்பர் சந்தர்ப்பம் கமுக்கமாக அனுமதி வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
C. அதிகாரம் மற்றும் சட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
திட்ட அனுமதி வாங்குவதற்கு என்ன தேவை? சட்டம் என்ன சொல்கிறது என்பதை குறித்த அடிப்படை அறிவு தேவப்படுகிறது. மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயதது போன்ற நிர்வாகத்தின் அடிப்படையில் சட்டங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு நிலைகளில் காணப்படுகிறது. Land சம்பந்தமான பட்டா, survey number, சிட்டா, தீர்வை ரசீது மற்றும் வில்லங்கம் போன்றவற்றை நேர்த்தியாக வைத்து கொள்ளுங்கள். கிராம பஞ்சாயதது பொறுத்த வரை president க்கு தான் அதிகாரம், மற்ற அமைப்புகளில் அதிகார செயல்பாடுகளில் வித்தியாசங்கள் இருக்கும். அவைகளை அறிந்து கொள்ளுங்கள். சில இடங்களில் நீண்டகால கட்டடங்களை புதிப்பிக்க அனுமதி இல்லாமலே அவைகளில் திரும்ப கட்டலாம் என்றும், ஆலயங்களுக்கு தீர்வை செலுத்த வேண்டாம் என்கிற பரிந்துரை சட்டங்களும் இருக்கிறது. அவைகளை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு கவர்மென்ட் சட்டங்களை அறிந்து கொள்ளுங்கள். அவைகளுக்கு ஏற்றபடி உங்களை ஆயத்தம் செய்யுங்கள். தேவைப்படும் பட்சத்தில் சில சட்ட நகல்களை கையில் வைத்து கொள்ளுங்கள். பெரும்பாலான அதிகாரிகளுக்கு கூட சட்டம் தெரியாது ஆனால் நியாயம் பேசுவார்கள்.
D. அவசரப் படாமல் சரியான தருணம் வர காத்து இருங்கள்.
எல்லாம் இருக்கிறது, சட்டம் தெரியும் என்று நானே பார்ப்பேன் என்று எடுத்தோம் கவிழ்த்தோம் வேலையை செய்யாதிருங்கள். அந்த குறிப்பிட்ட நேரம் சந்தர்ப்பம் பாருங்கள். அதற்கு முன். அதிகாரிகளை குறித்துப் study பண்ணுங்கள். அவர் எப்படி பட்டவர்? எப்படி move பண்ணலாம்? காசு வாங்கி காரியம் சாதித்து கொடுப்பவரா? Rss சித்தாந்தம் உடையவரா? அவரது சுபாவம் என்ன? அவரை எப்படி காரியம் சாதிக்க வைக்கலாம், யார் முலம் தொடர்பு கொள்ளலாம்? என்று கொஞ்சம் சரியான study பண்ணுங்கள். கிறிஸ்தவ அதிகாரிகளை விட இந்த விசயத்தில் மற்றவர்கள் பெரிதும் உதவுவர் எனவே எந்த அதிகாரியையும் உடனே நம்பாதபடி, அவரது ஹிஸ்டரியை படியுங்கள்! அதின் அடிப்படையில் காய் நகர்த்துங்கள். சிலர் யாரும் எனக்கு வேண்டாம்! நானே பார்த்து கொள்வேன் என்று விதண்டாவாதம் செய்பவர்கள் உண்டு. நல்ல legal ஆலோசனை கேளுங்கள். இவைகளை சரி செய்து கொடுக்கும் நம்பகமான நபர்களில் சிலரை நாடுங்கள். எப்போதுமே அதிகாரிகளுக்கும் சில நெருக்கமான agents இருப்பார்கள். அவர்களை கண்டுபிடியிங்கள். எதாவது சட்டம் மற்றும் நம்து உரிமையை மறிக்கும் காரியங்களை எழுதி கொடுங்கள் என்று கேட்டால், எழுதி கொடுக்காதபடி பாருங்கள். பிரச்சினை உள்ள இடத்தில் தனியாக போகாமல் அதற்குரிய legal மக்களோடு காரியங்களை சேர்ந்து செய்யுங்கள். கொஞ்சம் ஆயத்தம் ஆகி இருங்கள். அலுவல்கள் போகும் போது ரொம்ப பிரச்னை பண்ணுகிறவர் என்றால், மிரட்டுகிற அதிகாரி என்றால் ஒரு 400 rs அல்லது 600 ஆகும் ஒரு pocket பென் camera வாங்கி சட்டையில் வைத்து எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்து கொள்ளுங்கள் எப்படியாவது அது உதவி செய்யும்.
- விபரம் தெரிந்த செல்வாக்கு உள்ள போதகர்கள் உங்களை நாடி வரும் உங்களை விட அனுபவம் இல்லாத போதக்ர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்கள் சபைகளில் அதிகாரிகள் இருந்தால் அறிமுகம் செய்யுங்கள். உதவி செய்யவே சகோதரர்கள் பிறந்து இருக்கிறார்கள். நல்ல ஆலோசனை வழங்குங்கள். சபையில் அதிகாரிகள் இருந்தால் சபை விசயத்தில் யார் வந்தாலும் உதவி செய்ய போதனை கொடுங்கள். எங்க சபையில் அதிகாரி இருக்கிறார் என்று வீண் பெருமை கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாத, தானியேல் போல risk எடுக்காத அதிகாரிகளை வைத்து என்ன செய்ய?
- பரிசு கொடுத்து சாதிக்க முடியும் என்றால் லஞ்சம் என்று விதண்டாவாதம் செய்யாமல் ஜெபம் பண்ணி கொடுங்கள் அந்த அதிகாரி பின்னர் லஞ்சம் வாங்க நினைத்தால் கூட வாங்க முடியாத அளவில் கர்த்தர் பார்த்து கொள்வார்.
- அதிகாரிகளுக்கு வேண்டி ஜெபம் செய்யுங்கள். நல்ல ஒரு இணக்கமான உறவை வளர்த்து கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் அதிகாரிகள் எழும்ப உற்சாகம் செய்யுங்கள்.
மேற்கொண்ட காரியங்களை நன்றாக அறிந்து துல்லியமாக சரியான சமயம் பார்த்து காரியத்தை நிறைவேற்ற கிருபையை சார்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அதிகமாக ஜெபத்தில் தரித்து இருந்து, தேவ ஞானத்தோடு, கர்த்தரின் கிருபையை சார்ந்து, கர்த்தரின் அதிகாரத்தில் செயல்பட்டு, அவரது வல்லமையை தரித்து கொண்டு காரியத்தில் செயல் படுங்கள் கர்த்தர் நிச்சயம் கிருபை தருவார். வெற்றியும் தருவார்.
செலின்.