டி. சி. என் மீடியா இயக்குனர் பெ. பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பாரதியார் பயின்ற பள்ளியில் விழா:

நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடக இயக்குனர் மற்றும் மதுரை கிறிஸ்தவ சபை போதகருமான திரு. பெ. பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவை சேர்ந்த உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் “சாதனை தமிழன்” விருதினை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் தமிழ் துறைகளில் சாதித்தவர்களை ஆய்வு செய்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து சர்வதேச விருது விழாவில் அவர்களை கௌரவப்படுத்தி, அவர்களுக்குரிய அங்கீகாரத்தை மலேசியாவிலுள்ள உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் கொடுத்து வருகிறது.

இந்த நிறுவனமானது இந்த ஆண்டு மதுரையிலுள்ள ஞானகுரு அறக்கட்டளையுடன் இணைந்து சர்வதேச விருது விழாவினை 31, அக்டோபர் 2021 அன்று மாலை நடத்தியது. தேசிய கவிபாரதி பாரதியார் பல ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் சர்வதேச விருது விழா வெகுவிமர்சையாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நாட்டுப்புற கலைஞர்கள் அரங்கேற்றினார்கள்.

சர்வதேச விருது

இந்த விழாவில் திரு. பெ. பெவிஸ்டன் அவர்களின் 12 ஆண்டு கால தமிழ் இலக்கிய படைப்புகள் மற்றும் தமிழ் ஊடக சேவைகளை பாராட்டி சர்வதேச விருது விழாவில் “சாதனை தமிழன்” விருது வழங்கப்பட்டது. திரு. பெவிஸ்டன் அவர்களது பல்வேறு சமூக சேவையினை பாராட்டி கடந்த 9, அக்டோபர் 2021 அன்று சென்னையில் “சேவரத்னா” விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை:

இவ்விழாவிற்கு முனைவர். கோ. விசயராகவன் (இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், சென்னை) அவர்கள் தலைமை தாங்கினார்.

சிறப்புரை:

முனைவர். ஆ. மணிவண்ணன் (கூடுதல் காவல் கண்காணிப்பாளர், விருதுநகர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

சிறப்பு வாழ்த்து செய்தி:

உலக புகழ்பெற்ற தமிழ் முனைவர். போ. சத்திய மூர்த்தி (தலைவர், தமிழியல் துறை – தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை) சிறப்பு வாழ்த்துச் செய்திகளை வழங்கினார்.

ஒருங்கிணைப்பாளர்கள்:

இந்த சர்வதேச விருது விழாவினை ஞானகுரு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஞா. சித்தநாதன் மற்றும் மலேசியாவிலுள்ள உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவன தலைவர் முனைவர். பா தனேசு பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்து நடத்தினர்.

விருது பெற்ற போதகருக்கு மதுரையை சார்ந்த பத்திரிகை எழுத்தாளர். ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் உட்பட, ஏராளமான தலைவர்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.விருது பெற்ற போதகருக்கு இலக்கிய நல்லாசானின் சிறப்பு வாழ்த்து செய்தி:

பெ. பெவிஸ்டன் என்ற
தென் தமிழ்நாட்டு கிராமத்து மண்ணே

உம் Wisdom கண்டு வியக்கிறேன்
பொறியியல் படிக்காத
உம்மை,
படைத்தவர் தம்
பொறி’யில் பிடித்ததெப்படி?

தொலைத்தொடர்பு
சாதனங்களின்
தொழில்நுட்பத்தில்
உம் பத்து விரல்களும்
விரைவாய் விளையாடுகிறதே
அதெப்படி?

நீர் என்ன செய்கிறீர் என்பது
நம்மவர்களில் பலருக்கு தெரியாது – ஆனால்
உன்னதருக்கும் உலகத்தாருக்கும்
மிக நன்றாக தெரிகிறது.!! – ஆகவே தான்
இத்தகைய விருதுகள்! இத்தகைய அங்கீகாரம்!!

சேவரத்னா, முனைவர் வரிசையில் இன்று சாதனைத் தமிழன் என்ற பட்டம் உமக்கு வழங்கப்பட்டிருப்பது மிக பொருத்தமானது. அதிலும் உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் உங்களை கண்டெடுத்திருப்பது சிறப்புக்குரியது.

நீர் சாதிக்க பிறந்தவர் – பல
சாதனையாளர்களை உருவாக்க பிறந்தவர்..! 
தேவனின் சித்தத்திற்காக தன்னையே விற்றுப் போட்ட
உமக்கு இத்தகைய விருதுகள் மட்டுமல்ல – இன்னும்
பல விருதுகள் வரிசையில் காத்திருக்கிறது.

உதிக்கும் ஔியை தேடி தானே ராஜாக்கள் வருவார்கள்!!

தமிழ் கிறிஸ்டியன் NETWORK வழியாக
தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு நீர் செய்யும் GOOD WORK
பாராட்டுக்குரியது.

இந்நாளில் உம்மை இன்னும் உற்சாகப்படுத்தி
உன்னத சேவையில் இன்னும் ஓர்
இமயத்தைக் காண
வழங்கப்பட்டுள்ள
சர்வதேச விருதைக் கண்டு
வியப்புடன் உவகைக்கொள்கிறேன்

இன்னும் உம்மைத்தேடி
பல்வேறு விருதுகள் அணிவகுத்து
நிற்பதைக் காண்கிறேன்

உலகம் முழுவதும் பரவிப் பாய்ந்துள்ள
சந்தன விருட்சங்களுக்கு
சத்தான மன்னாவை
சளைக்காமல் வாரி வழங்க
வாழ்த்துகிறேன்

என்னை தமிழ் கிறிஸ்தவ உலகத்திற்கு
அடையாளம் காட்டிய
என் உடன்பிறவா
இளைய சகோதரனே
உம்மை வாழ்த்துகிறேன்

உமக்குப் பின்னே நின்று
சத்தமில்லாமல்
தோள்கொடுத்து
தன் பங்கை நிறைவேற்றும்
உம் துணைவியார்
பிஸ்ஸி பெவிஸ்டன் – அவர்களையும்

இணையதளப் பணியில்
இணைக்கரம் கொடுக்கும்
உடன்பிறப்பாம்
கிருபன் யோசுவா அவர்களையும்
வாழ்த்துகிறேன்.

நல்லாசான் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இலக்கிய பிரிவு இயக்குநர்
ஆறுதல் FM வானொலிச் செய்தியாளர்
tcnmedia.in