தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பெந்தெகொஸ்தே போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் வெற்றி பெற்றார்.
இந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இந்த சம்பவத்தை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக ஊடகங்கள் அறிவித்துள்ளது.
“ஒரு நாள் தேவன் என் இருதயத்தோடு பேசினார். நான் உனது ஊழியத்தின் எல்லையை விரிவுபடுத்துகிறேன். இதனால் முழு தேசத்துக்கும் போதகராக இருந்து ஊழியம் செய்ய முடியும்” என்று தேவன் சொன்ன வார்த்தைகளை போதகர் லாசரஸ் சக்வேரா அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு குறிப்பிட்ட காணொளியில் பேசியிருந்தார்.
இந்த போதகர் லாசரஸ் சக்வேரா தற்போது 65 வயதை உடையவர். ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா அவர்கள் தத்துவம் மற்றும் இறையியல் பட்டங்கள் பெற்றவர். உலகளாவிய இறையியல் விரிவுரையாளர். மேலும் உலகளாவிய அசெம்ப்ளி ஆப் காட் (Assembly of God Organization) மலாவி தேசத்தின் முன்னாள் பொது தலைவராக 1989 முதல் 2013 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா அவரது மனைவியின் பெயர் திருமதி மோனிகா லாசரஸ். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
தேசத்தை கடவுள் விரும்பும் வழியில் நடத்த கடவுள் பயந்தவர்கள் அரசு ஆளுகைக்கு வரவேண்டுமென்று ஜெபித்த ஜெபம் கேட்கப்பட்டதாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்க தேசத்தின் எழுப்புதலுக்கு தேவன் தந்த தலைவருக்காக மனதார நன்றி கூறுவோம். இந்தியாவிலும் நல்லாட்சியை எதிர்பார்ப்போம். ஆட்சியாளர்களுக்காக ஜெபிப்போம்.
இந்த செய்தியை வீடியோவாக பாருங்கள்