தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது முழு ஊரடங்கு என்பதால் விசுவாசிகளின்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெறுகிறது.. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்துகிறார்கள். அது, ஆன்லைன் மூலம் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் இருந்தபடியே கலந்து கொள்கின்றனர். நற்செய்தியும் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதன் வாயிலாக சாதாரண கிராம ஊழியங்கள் கூட இனறு சர்வதேச அளவில் ஆசீர்வாதமாக பயன்பட்டு வருகிறது.