நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து...!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பதிவு: டிசம்பர் 25,  2021 08:26 AM புதுடெல்லி,

உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகளை களைகட்டியுள்ளது.

கிறிஸ்தவ மத வழிபாட்டு தளமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். சேவை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் உன்னதமான போதனைகளை நாம் நினைவுகூருகிறோம். அனைவரும் நலமாகவும் வளமாகவும் இருக்கட்டும்’ என பதிவிட்டார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தியில், நாட்டுமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். குறிப்பாக, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நீதியின் மதிப்பு மற்றும் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு சமுதாயத்தை உருவாக்க முயல்வோம். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நம் வாழ்வில் பின்பற்றுவோம் என உறுதியேற்போம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.