இதுவரை இல்லாத அளவில் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கிடையே தேர்தல் பற்றிய சமூக விளிப்புணர்வு சற்று அதிகமாக இந்தமுறை ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வெளியான ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை கிறிஸ்தவர்கள் உறுதிமொழி என்ற வீடியோவின் எதிரொலியாக பல திருச்சபைகளில் இந்த உறுதிமொழி செய்யப்பட்டது. இந்த வகையில் தற்போது ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம். இத்தகைய குற்றத்தை கிறிஸ்தவர்கள் செய்யக்கூடாது. வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் உண்மை கிறிஸ்தவர் எவரும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என உளமாற உறுதியெடுப்போம். தேசம் மாறாது. நாம் தான் மாறவேண்டும். நமது மாற்றமே தேசத்தின் மாற்றம்.

இந்த உறுதிமொழி காட்சியை ஒரு செய்தியாக மட்டும் பார்க்காமல் நீங்களும் உங்கள் மனதில் உறுதியான உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவனாகிய நான் எனது ஒட்டை விற்கமாட்டேன் என்று.