சென்னை; ஜன 23

மாணவ/ மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு 12ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது மாணவ, மாணவிகள் கரோனா கால கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளிலும் கல்வி தொலைக்காட்சிகளிலும் மட்டுமே பாடங்களை கவனித்த மாணவர்கள் தற்போது பள்ளிக்கு சென்று வருகின்றனர்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன பொது தேர்வு குறித்து இன்னும் தெளிவான அறிவிப்புகள் வெளிவரவில்லை. இச்சூழ்நிலையில் பள்ளிகளுக்கு சென்றாலே பொதுத் தேர்வுக்கு அச்சப்படும் மாணவர்கள் இம்முறை ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் தயாராகி உள்ளது அவர்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பள்ளி திறந்த இரண்டு நாட்கள் மட்டுமே உளவியல் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட்டன.

மாணவர்களுக்கு உடல் நலம் பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து சுகாதாரத் துறையின் சார்பில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உடல் நிலை உறுதி கண்காணிக்கப்பட்டாலும் மனதளவில் அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள உளவியல் ஆலோசர்களின் உதவி தேவைப்படுகிறது.

பள்ளிக்கு அச்சமில்லாமல் வந்து செல்லவும் தேர்வுக்கு தன்னம்பிக்கையோடு தயாராவதற்கும் தேர்வு முடிவுகளின் போது அதை ஏற்று கொள்வதற்கும் மனதளவில் அவர்களை தயார்படுத்த வேண்டியுள்ளது. பள்ளி கல்வித் துறையின் சார்பில் உளவியல் ஆலோசனை திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட உளவியல் நிபுணர்கள் வாயிலாக ஆலோசனை வழங்கும் முகாமை மீண்டும் செயல்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.