கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிட முனைவர் பட்டம் படிக்கும் மாணவர்கள் 1,600 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தை ரூ.8 லட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ரூ.1 லட்சம் வீதம் 1600 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அதனை செயல்படுத்தும் விதமாக தற்பொழுது அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; ஆதிதிராவிடர் நல ஆணையரின் கருத்தினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, அதனை ஏற்று, 2021- 2022 ம் கல்வி ஆண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு ரூ.1 இலட்சம் வீதம் 1600 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கியும் அரசு ஆணையிடுகிறது.
மேலும் 2021-2022-ஆம் ஆண்டிற்கு முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை இணையதள வாயிலாக மட்டுமே செயல்படுத்த வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி…
http://dhunt.in/oQ6HA?s=a&uu=0x8d64661d702c9e80&ss=wsp
Source : “1News Nation” via Dailyhunt