
தியாக தீபம் திலீபனைப் போன்று அம்பிகையும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டுமா? கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி

Srilanka: March 2021
தியாக தீபம் திலிபனை போன்று பிரித்தானியாவில் ஈழ மக்களுக்காக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரும் தன்னுயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பதையா சர்வதேசம் எதிர்பார்க்கின்றது என கிறிஸ்தவ தோழமை இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதவளிக்காது, இந்தியா போன்று சர்வதேச சமூகமும் தற்போது பின்வாங்குவதாக கிறிஸ்தவ தோழமை இயக்கத்தின் சார்பில் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் விசனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கமைய, இரணைத்தீவில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 8வது நாளாகவும் இன்றும் தொடர்கின்றது.
குறித்த போராட்டத்தை வலு சேர்க்கும் வகையில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், கிறிஸ்தவ தோழமை இயக்கம் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கிறிஸ்தவ தோழமை இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்,
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுவது தமிழ் மக்களின் அரசியலுக்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவில் சமுக செயற்பாட்டாளர் ஸ்ரீலங்கா அரசாங்கமோ, அமைச்சர்களோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ உரிய தீர்வை வழங்காத காரணத்தினால் இரணைதீவு மக்களின் போராட்டம் தொடர்வதாக இரணைதீவு பங்குத்தந்தை மடுத்தீன் குறிப்பிட்டுள்ளார்.
Thanks: ibctamil.com