Latest News !
Satan Church co-founder met by Jesus. Riaan Swiegelaar resigned on 5.7.2022

சாத்தான் சபையின் இணை நிறுவனர் ரியான் சுவிஜெலார் க்கு
இயேசு தரிசனமானார்

05/07/2022

சாத்தான் சபை ரகசியமாக இயங்கிய காலம் மாறி உலகமெங்கும் பகிரங்கமாக பரவி வரும் இக்காலத்தில் அதின் தலைவரில் ஒருவரையே ஆண்டவர் 5.7.2022 அன்று தொட்டார்.

தன் அறையில் வழக்கம்போல் சாத்தான் தியானத்தில் இவர் இருந்தபோது ஆண்டவர் இயேசு நேரில் தோன்றினார்.

பலராலும் வெறுக்கப்பட்ட இவரை முந்தையநாள் ஒரு பெண் சந்தித்து அன்பாக நடந்து கொண்டார். வெறுப்பும் பகையும் கோபமும் மூர்க்கமும் நிறைந்த அவருக்கு அந்த பெண்ணின் அன்பு ஆறுதலளித்தது. விசாரிக்கையில் அப்பெண் இயேசுவின் அன்பை அறிவிக்கின்றவர் என தெரிய வந்தது.

அப்பெண்ணிடம் இயேசு என்பதும் அவர் அன்பு என்பதும் அவர் உயிரோடு உள்ளார் என்பதும் கற்பனைகள் என வாதிட்டார். அன்போடு விளக்கமளித்து அப்பெண் சென்றுவிட்டார்.

இப்போது ஆண்டவர் இயேசுவே நேரில் வந்து காட்சியளித்ததும் அவரிடத்தில் நீர்தான் இயேசு என்பதற்கு ஆதாரம் என்ன என கேட்டார். அப்போது ஆண்டவர் கருனையோடு இவரை பார்த்தார் அதோடு தமது பரிசுத்த அன்பும் கனிவும் இவருக்குள் பாயும்படி செய்தார். அவ்வளவுதான் இவர் உள்ளம் நொடிப்பொழுதில் உருகியது. வாழ்வில் முதன்முதலாக தன்னை இயேசுவுக்கு அர்ப்பணித்தார்.

உடனே ஓர் விடியோ வெளியிட்டு சாத்தான் சபையிலிருந்து ராஜினாமாவும் செய்து வெளியேறிவிட்டார்.

“(சாத்தான்)திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.

(இயேசு)நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் வந்தேன்.‌
யோவான்.10:10