அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

நம் கால்களில் அணிய நூற்றுக்கணக்கான மாடல்களில் ஏராளமான ஷீக்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஷீ அவைகளில் ஒன்று அல்ல. இது முற்றிலும் வித்தியாசமானது. இந்த ஷீவின் பெயர் சாத்தான் ஷீ என்பதாகும். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சாத்தான் வழிபாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு எதிராக பலர் போர்க்கொடி உயர்த்தி கொண்டு தான் இருக்கின்றனர்.

சாத்தான் வழிபாடு என்ற பெயரில் இளைஞர்கள் பலர் போதை பழக்கத்திற்கும் ஆபாசங்களுக்கும் அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சாத்தான் ஷீக்களுக்கு உலகமுழுவதும் பலத்த எதிர்ப்பு எழும்பியுள்ளது.

இந்த சாத்தான் ஷீக்களை அமெரிக்காவின் நீயூயார்க் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் MSCHF என்ற நிறுவனம் வெளியீட்டுள்ளது. இந்த ஷீவில் சிலுவை அடையாளம் தலை கீழாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பென்டாகிராம் மற்றும் வேதாகம வசனமான ” சாத்தான் வானத்திலிருந்து மின்னலை போல விழுவதை கண்டேன்” என்ற வசனத்தின் இருப்பிடம் லூக்கா 10:38 என்று அச்சடிப்பட்டிருக்கிறது.

இந்த சாத்தான் ஷீக்கள் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மையோடு மனித இரத்தமும் கலந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு ஷீவின் விலை 1018 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 74 ஆயிரம் ரூபாய் ந 666 ஷீக்களை MSCHF நிறுவனம் தயார் செய்து பிரபல அமெரிக்க பாடகர் லில் நாஸ் எக்ஸ் உடன் இணைந்து  வெளியிட்டுள்ளது.

இந்த சாத்தான் ஷீக்கள் விற்பனைக்கு வந்த ஒரு நிமிடத்திற்குள் அனைத்து ஷீக்களும் அதிவேகமாகவும் முழுவதுமாக விற்று தீர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதனையடுத்து பெரும் கன்டன குரல்கள் ஆங்காங்கே ஒலித்து வருகிறது.

கிறிஸ்தவ மத நம்பிக்கைகளையும் அடையாளங்களையும் நேரடியாக கொச்சைப்படுத்தி அவமதித்திருப்பது அமைதியாக இருக்கும் கிறிஸ்தவர்களை சீண்டி பார்ப்பது போல் இருக்கிறது. எது எப்படியோ கிறிஸ்து வெளிப்படும்போது நீதியும் வெளிப்படும்.

இது போன்ற செயல்கள் இயேசு கிறிஸ்துவின் அதிதீவிர வருகையை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உங்களை சார்ந்தவர்களுக்கு தவறாமல் இந்த வீடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி