நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு திருநெல்வேலி திருமண்டலம் சி.எஸ்.ஐ பேராயர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
வழக்கறிஞர் பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் ஆல்பர்ட் பெர்ணான்டோ கலந்து கொண்டு வாரியத்தில் உள்ள திட்டங்கள், பயன் பெற போகும் பணியாளர்கள், குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் ஆர்.சி திருச்சபை அருட்பணி.மை.பா.சேசுராஜ், இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் மருத்துவர். அன்புராஜன்ஏ.ஜி.சபை தலைமை போதகர் கிளாரன்ஸ் மருதையா போதகர்.ஜோயல், உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் செய்தி தொடர்பாளர் செ.சா. ஜெபசிங், ஆசிரியர் லூயிஸ், திரு.மரிய சூசை, இரட்சணிய சேனை மேஜர் ஜான் கிறிஸ்டோபர், ஆசிரியர் ஆசிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை களையும் இணைத்து மாவட்ட கமிட்டி அமைப்பது, மாவட்ட கமிட்டி மூலம் 8 தாலுகாவிலும் தாலுகா கமிட்டி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மேஜர் ஜான் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.