கிறிஸ்தவ பள்ளியில் சி. எஸ். ஐ  போதகர்கள் முன்னிலையில் பீடாதிபதியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம்

25, அக்டோபர் 2021
வேலூர்

வேலூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஸ்தாபனம் நடத்தும் வூரீஸ் மேல்நிலை பள்ளியின் 150 வது ஆண்டு விழா கொண்டாட்டம் வேலூர் சி.எஸ்.ஐ சபைகளின் தலைவர் அருட்திரு ஹென்றி சர்மா நித்தியானந்தம் தலைமையில் 25, அக்டோபர் 2021 அன்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு முன்னாள் மாணவன் என்ற பெயரில் வேலூர் பொற்கோயில் நாராயணிபீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சக்தி அம்மா என்று அழைக்கப்பட்டும், நாராயணியின் உருவானவர் என்று கூறிவரும் சக்தி அம்மா என்று அழைக்கப்படும் பூஜாரியை பள்ளிக்கு வரவழைத்து புதிய கட்டிடங்கள் பிரதிஷ்டை (Dedication) செய்யப்பட்டன.

நிகழ்வில்  வேத பகுதி, ஆசீர்வாதம் போன்ற கிறிஸ்தவம் சார்ந்த அம்சங்கள் இடம்பெறாமல் ‘அம்மாவின்’ பூஜாரிகள் புதிய அறைகளில் சுலோகன்களை ஓதி நிகழ்வு அரங்கேறியது.

நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தின மூத்த கிறிஸ்தவ போதகர் ‘அன்பே சிவம்’ என்று தன் உரையை ஆரம்பித்தார். ‘அம்மாவின்’ உறைக்கு முன் சுலோகன்கள் ஓதபட்டன. அழைப்பிதழில் (In the Divine presence ) என்று (அம்மா) சாமியாரின் தலைப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.

20 லட்சம் நன்கொடைக்காக விசுவாசத்தையே விற்றுப்போட்டிருக்கும் வேலூர் திருச்சபை தலைமையை உலகெமெங்குமுள்ள கிறிஸ்தவ சபையார் கண்டித்து வருகின்றனர்.

ஊரிஸ் என்ற கிறிஸ்தவ மிஷனரி ஏழை எளிய மக்களின் கல்வியறிவு மேம்பட ஜெபத்துடனும் தியாகத்துடனும் இந்த கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று பாதை மாறிச் சென்றிருப்பதாக மக்கள் தங்கள் அதிருப்தியை சமூக ஊடகங்களிலன பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பள்ளியில் படித்து காவல் துறையில், அரசு அலுவுலகங்களில், வெளிநாடுகளில் என நல்ல பதவிகளை வகித்து வரும் எத்தனையோ நபர்கள் இருக்கும் பட்சத்தில், பள்ளி படிப்பை முடிக்காத (Dropout) ஒரு சாமியாரை முன்னால் மாணவர் என்ற பெயரில் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது வேதனையை தருகிறது.

முன்னதாக, சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுக்க சாமியாரின் காலில் கீழ் தரையில் அமர்ந்து வேண்டுகோள் வைத்த வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது.

மதங்களை கடந்து மனிதர்களை நேசிப்பதை கிறிஸ்தவம் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் மதநல்லிணக்கம் என்ற பெயரில் கிறிஸ்தவத்தின் அஸ்திபார உபதேசங்களை மறந்து இணக்கமாயிருப்பதை வேதாகமம் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை. 

இத்தகைய தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய நிர்வாகம் தாமாக முன்வந்து தன்னிலை விளக்கம் கொடுத்து தங்கள் தவறுகளுக்காக மன்னிப்பு கோர வேண்டுமென்பதே கிறிஸ்தவர்களின் கோரிக்கையாக சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பதிவிட்டுவருகின்றனர்.

கிறிஸ்தவ செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணையத்தோடு இணைந்திருங்கள். உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.