
சென்னை; 19, பிப்ரவரி 2021
சென்னை அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது
சென்னையில் அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் போதகர்கள் பட்டமளிப்பு விழா எழும்பூர் ஜீவன ஜோதி அரங்கில் வைத்து நடைபெற்றது.
இறையியல் கல்லூரி நிறுவனர் மாட்ரேட்டர் பேராயர். முனைவர் ஜோசப் அவர்கள் தலைமை தாங்கினார். கேரளா மாநில ஆயர்கள் .கிளிட்டஸ் ரோசாரியா, ஜான்சன், ‘ சுபாஷ் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறையியல் கல்லூரி முதல்வர் ஆயர். ஸ்டெல்லா ஜோசப் வரவேற்புரை நிகழ்த்தினார். 25 புதிய போதகர்களுக்கு இறையியல் பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்கள் செய்து வரும் சமூக பணிக்கும் குறிப்பாக கரோனா கால கட்டத்தில் 65 நாட்களுக்கு மேலாக அனைத்து திருச்சபைகளையும் ஒருங்கிணைத்து கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி தினமும் மதியம் 1250 நபர்கள் மாலை 1250 நபர்கள் என சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர், ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் என தினமும் 2500 பேருக்கு தனது அமைப்பு மூலம் உணவு வழங்கி வந்துள்ளார்.
கிறிஸ்தவ சபைகளுக்கு, போதகர்களுக்கு தமிழக அரசாங்கத்தின் மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செய்து கொடுத்து கொண்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களை சிறுபான்மை மக்கள் பயன்படக்கூடிய வகையில் சிறப்பாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
சிறுபான்மை மாணவ/மாணவிகளுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இலவச முகாம் நடத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவச பதிவு செய்து கொடுத்து மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்
மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதி உறுப்பினராக பொறுப்பில் உள்ளார் . இந்திட்டத்தில் மத்திய அரசின் நிதி மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பயன்படக்கூடிய வகையில் மத்திய அரசின் திட்டத்தை கொண்டு சென்றுள்ளார்.
மேலும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் அமைப்பின் பொருளாளராகவும், தலைமை செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
சாதி, மதங்கள் கடந்து அனைத்து சமூக மக்களுக்கும் பல்வேறு சமூக பணிகளை சிறப்பான முறையில் செயது கொண்டு வரும் சமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சென்னை அபிஷேகம் திருச்சபை டயோசிஸ் இறையியல் கல்லூரி சார்பில் சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டத்தை மாட்ரேட்டர் , பேராயர் முனைவர் ஜோசப்’ இறையியல் கல்லூரி முதல்வர் ஆயர் ஸ்டெல்லா ஜோசப் ஆகியோர் வழங்கி கெளரவித்தார்கள்.