கல்லறைக்கு இடம் இல்லாமல்
தவிக்கும் புதிய மற்றும் சுயாதீன திருச்சபைகளை மனதில் கொண்டு சில ஆலோசனைகள்

முக்கியமான ஒரு விஷயத்தை எழுதுகிறேன் தயவுசெய்து படியுங்கள். அதாவது RC, CSI,CMS, லுத்தரன், மெத்தடிஸ்ட், இரட்சண்ய சேனை இப்படி மெயின் லைன் திருச்சபைகளுக்கு சொந்தமாக ஏக்கர் கணக்கில் கல்லறைக்கு சொந்த பூமி உள்ளது. அநேக பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும் சொந்தமாக கல்லறைக்கு இடம் வாங்கி வைத்திருக்கிறார்கள் அதை பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

ஆனால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுயாதீன திருச்சபைகளுக்கு கல்லறைக்கு இடம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அது மட்டுமல்ல புதிய ஆத்துமாக்கள் திருச்சபைக்கு வருவது குறைகிறது. திருச்சபையின் மேல் உள்ள நம்பிக்கையும் தகர்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே மாவட்டங்கள் தோறும் தாலுகாக்கள் தோறும் உள்ள பதிவு செய்யப்பட்ட பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ ஊழியர்கள் ஐக்கியங்கள் இணைந்து ஒரு மனுவை ஐக்கியத்தின் பேரில் உள்ள லட்டர் பேர்டில் கிறிஸ்தவர்களுக்கு பொதுவான கல்லறை பூமி வேண்டும் என்று எழுதி அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட கலெக்டர் அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த மனுவை கவனிக்காத பட்சத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி அதை மீடியாக்கள் கவனத்திற்கு கொண்டு வந்து அரசுக்கு நியாபாகப்படுத்த வேண்டும். அதற்கு முன்பு எங்கெங்கு புறம்போக்கு இடங்கள் இருக்கிறதோ அதை வேவு பார்த்து அந்த விபரத்தையும் மனுவில் குறிப்பிட வேண்டும்.
நிச்சயமாக காரியம் கைகூடும்.காரணம் இந்தியா மத சார்பற்ற நாடு எல்ல மதத்தினருக்கும் உதவி செய்ய சட்டம் இருக்கிறது.

ஒருவேளை சொந்த கல்லறை பூமி இல்லாத திருச்சபைகளின் விசுவாசிகள் இறந்துவிட்டால் சொந்த கல்லறை பூமி உள்ள திருச்சபைகள் அடக்கம் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இலவசமாக செய்யாவிட்டாலும் குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயம் செய்து உதவி செய்ய வேண்டும். அப்போது தான் புதிய ஆத்துமாக்கள் திருச்சபைக்கு வருவதற்கான தடைகள் நீங்கி பயம் இல்லாமற் போகும் என பெங்களூரை சேர்ந்த போதகர் டேவிட் லிவிங்ஸ்டன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.