27 Jan 2022

தங்கள் பிள்ளைகள் ஆணுக்கு ஆண் பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று பெற்றோர்களுக்கு வாடிகனில் பேசிய போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிகனில் நடைபெற்ற வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பேசிய போப் ஆண்டவர் பெற்றோர்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது தங்களது பிள்ளைகள் ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று ஒரே பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அவ்வாறு இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஒருபோதும் கண்டிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி சர்ச் ஒரு போதும் ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக்கொள்ளாது என்றாலும்கூட இது தொடர்பான சிவில் யூனியன் சட்டங்களை கண்டிப்பாக ஆதரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Thanks: செய்திசோலை, Dailyhunt (27 Jan 2022)

முக்கிய குறிப்பு:

உலகமெங்கும் வைரலாகி வரும் இந்த சர்ச்சை கருத்துக்கு கிறிஸ்தவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஆதாமுக்கு ஏவாளை தான் தேவன் துணையாக கொடுத்தார். ஆதாமுக்கு துணையாக இன்னுமொரு ஆணையோ, ஏவாளுக்கு துணையாக மற்றொரு பெண்ணையோ தேவன் அனுமதிக்கவில்லை. ஆணுக்கு பெண்ணை தான் தேவன் திருமண உடன்படிக்கைக்கு அனுமதித்துள்ளார். இப்படியிருக்க வேதவசனத்திற்கு முரணாக கூறப்படும் நூதன ஆலோசனைகளுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.