கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி

சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார்.

13.06.2021 அன்று போதகர் ஜீவானந்தத்தை நிர்வானப்படுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி ஜெனிஃபரையும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக வீராணம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை காவல்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவில்லை.

காவல்துறை நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென “கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக” CM CELL, கேட்டுக்கொண்டோம்

நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினால் *கிறித்தவர்களையும், கிறித்தவ அமைப்புகளையும், பெண்கள் அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராட நேரிடும் என பல அமைப்புகள் பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக மத வெறியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நம்மை ஆளும் ஆண்டவருக்கும்,சேலம் மாவட்ட காவல் துறைக்கும், கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்.திரு.துரை அருள்தாஸ், வழக்கறிஞர் பிரிவு தலைவர்.ADV.திரு.சரவணன் பிரட்ரிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் திரு.I.ஸ்டீபன், NCC மாநில தலைவர்.திரு.பிரபு ராமலிங்கம், சிறுபான்மை மக்கள் நலக்கட்சி நிறுவனர்.பேராயர்.டாக்டர்.சாம் இயேசுதாஸ் & நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி சேலம் நிர்வாகிகள், விசிக சேலம் நிர்வாகிகள், சேலம் கிறிஸ்தவ போதகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.தனபால் மற்றும் நிர்வாகிகள், TCN MEDIA, சேலம் மாவட்ட போதகர்கள் ஐக்கியம் மற்றும் ஜெபித்த, கொடுத்த, செய்திகளை சமூக வலைதலங்களில் பகிர்ந்த அனைவருக்கும்கிறித்தவ மக்கள் கூட்டமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கிறித்த மக்கள் கூட்டமைப்பு
திரு.துரை அருள்தாஸ்.
பொதுச்செயலாளர்
மா.ஜேம்ஸ் ராதாகிருஷ்ணன்.
துணைப்பொதுச்செயலாளர்.