சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி.கைது செய்ய வலியுறுத்தி நெல்லையில் பிஷப், சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு –

நெல்லை தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்த பிஜேபி பிரமுகர் திபாகரனை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி தலைவர் பிஷப். சாம்ஜேசுதாஸ், உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

தூத்துக்குடியில் ஐ.டி கம்பனி நடத்தி வரும் கோவில் ராஜ், ஏரல் பகுதியை சேர்ந்த ராஜா ஆகியோர் சாத்தான்குளம் அருகே உள்ள நரையன் குடியிருப்பை சேர்ந்த பிஜேபி மாவட்ட தொழில் அணி துணை தலைவராக பொறுப்பு வகித்து வரும் திபாகரன், அவரது மனைவி ஜூலி ஆகியோர் அவர்களை அணுகி அரசு வேலை, வி.ஏ.ஓ வேலை. தூத்துக்குடி மாநகராட்சியில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதை நம்பிய கோயில்ராஜ் , ராஜா ஆகியோர் முன்றடைப்பை சேர்ந்த பெண் உட்பட 26 பேரிடம் பணம் பெற்று முதல் தவணையாக 64 லட்சமும், அதன் பிறகு இரண்டாம் கட்டமாக 43 லட்சம் என மொத்தம் 1 கோடியே 7 லட்சம் வரை வழங்கி உள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக வேலை வாங்கி தராமல் பணத்தையும் தராமல் இருந்த திபாகரன் கடந்த நவம்பர் மாதம் கோயில் ராஜை வரவழைத்து , விஏஒ , தூத்துக்குடி மாநகராட்சி போன்றவற்றுக்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளார். அந்த பணி நியமண ஆணையை பணம் கொடுத்தவர்களிடம் கோயிலராஜ் வழங்கி உள்ளார். பணி நியமன ஆணை பெற்றவர்கள் அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் காண்பித்தபோது அரசு ஆணைகள் அனைத்தும் போலியானது என்பதை கண்டு அதிர்ந்து போனர்.

போலி ஆணை வழங்கிய திபாகரனை தொடர்பு கொண்ட கோயில்ராஜ், ராஜா ஆகியோர் பணத்தை திரும்பி கேட்டு உள்ளனர். அதற்கு திபாகரன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார் ஆனாலும் பயனில்லை,

இதனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் கோயில் ராஜ், ராஜா, ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கின் அடிப்படையில் திபாகரனை கைது செய்ய உத்திரவிடபட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் இதுவரை திபாகரனை கைது செய்யவில்லை. பிஜேபி கட்சியில் பொறுப்பில் இருப்பதால் சிறுபான்மை மக்களை மிரட்டி கொண்டு வருகிறார். பிஜேபி யில் இருப்பதால் போலிசார் திபாகரன் தலைமறைவாக இருப்பதாவும் தேடிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பிஜேபி கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு வருகிறார் பலகோடி மோசடி செய்த நபர் சுதந்திரமாக உலா வருகிறார். பணம் கொடுத்து ஏமாந்த சிறுபான்னம மக்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்.இது குறித்து டிஐஜியிடம் புகார் மனு வழங்கி உள்ளோம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து திபாகரனன கைது செய்ய வேண்டும் .உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

பேட்டியின் போது தூத்துக்குடி பெந்தேகோஸ்தே சபை சங்க செயலாளர் நசரேயன், பாதிக்கப்பட்ட போதகர் கோயில்ராஜ், ராஜா , போதகர் வேதக்கண் உட்பட பலர் உடனிருந்தனர்.