கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் நல்லாசான் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பாரதியார் பயின்ற பள்ளியில் விழா:

நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகத்தில் இலக்கிய துறையில் பல ஆண்டுகள் நிர்வகித்து வரும் திரு. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் அவர்களுக்கு மலேசியாவை சேர்ந்த உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் நல்லாசான் விருதினை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் தமிழ் துறைகளில் சாதித்தவர்களை ஆய்வு செய்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து சர்வதேச விருது விழாவில் அவர்களை கௌரவப்படுத்தி, அவர்களுக்குரிய அங்கீகாரத்தை மலேசியாவிலுள்ள உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் கொடுத்து வருகிறது.

இந்த நிறுவனமானது இந்த ஆண்டு மதுரையிலுள்ள ஞானகுரு அறக்கட்டளையுடன் இணைந்து சர்வதேச விருது விழாவினை 31, அக்டோபர் 2021 அன்று மாலை நடத்தியது. தேசிய கவிபாரதி பாரதியார் பல ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் சர்வதேச விருது விழா வெகுவிமர்சையாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நாட்டுப்புற கலைஞர்கள் அரங்கேற்றினார்கள்.

சர்வதேச விருது

இந்த விழாவில் திரு. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் அவர்களின் இருபத்து மூன்று ஆண்டு கால போதனை மற்றும் தமிழ் இலக்கியங்களை பாராட்டி தலைவர்கள் நல்லாசன் விருது வழங்கினர்.

தலைமை:

இவ்விழாவிற்கு முனைவர். கோ. விசயராகவன் (இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், சென்னை) அவர்கள் தலைமை தாங்கினார்.

சிறப்புரை:

முனைவர். ஆ. மணிவண்ணன் (கூடுதல் காவல் கண்காணிப்பாளர், விருதுநகர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

சிறப்பு வாழ்த்து செய்திகள்:

உலகளாவிய அறிஞர்களின் தமிழ் பயிற்சியாளார் முனைவர். போ. சத்திய மூர்த்தி (தலைவர், தமிழியல் துறை – தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை) ஆகியோர் சிறப்பு வாழ்த்துச் செய்தியினை வழங்கினார்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள்:

இந்த சர்வதேச விருது விழாவினை ஞானகுரு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஞா. சித்தநாதன் மற்றும் மலேசியாவிலுள்ள உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவன தலைவர் முனைவர். பா தனேசு பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்து நடத்தினர்.

விருது பெற்ற மதுரையை சார்ந்த பத்திரிகை எழுத்தாளர். ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் அவர்களுக்கு TCN Media இயக்குனர் பாஸ்டர். பெவிஸ்டன் உட்பட, ஏராளமான தலைவர்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



விருது பெற்ற போதகருக்கு சிறப்பு வாழ்த்து செய்தி:

கவிபாடும் வித்யா’ வே
உம் விண் பார்வையும்
வேதத்தின் மீது நீர் வைத்துள்ள
கண்பார்வையும் வித்தியாசமானவை
என்பதை எங்குமுள்ள என் தமிழ்
கிறிஸ்தவ சொந்தங்கள் அறிவர்

உம் விரல்கள் விரைவாய்
எழுதும் எழுத்தாணி

நீரே இக்கால
கர்த்தரின் எழுத்தாணி

இந்நாளில் உமக்குக் கிடைத்த
நல்லாசான் என்ற சர்வதேச விருதை
எண்ணி அகமகிழ்கிறேன்

உம் சேவை தேவனுக்குத் தேவை
உம் சேவை நாட்டுக்குத் தேவை

பைந்தமிழ் புலவரே! – உம்
கைந்தெழுக் கவிதைகள் சொல்லிடும்
பைம்பொழில் வாசமே!

முப்பத்து நான்கு ஆண்டுகள் இறைப்பணி
இருபத்து இரண்டு ஆண்டுகள் இலக்கியப்பணி
இவ்விரண்டும் தொய்வின்றி, ஆரவாரமின்றி
உலகிற்கு சுவை தந்துகொண்டிருக்கிறது!!

உம் எழுத்துக்களால் தமிழுக்கு அழகு
உம் எண்ணங்களால் வேதத்திற்கு அழகு
உம் வாழ்க்கையால் தேவ ராஜ்யத்திற்கு அழகு
உம் உயர்ந்த ஊழியத்தால் எங்களுக்கு அழகு

இன்னும் அதிகமான கவிக் கட்டுரைகளை
இந்த மீடியா வழியாக
உலகிற்கு வாரி வழங்கி
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன்

பாஸ்டர் B. பெவிஸ்டன்
தமிழ் கிறிஸ்டியன் நெட்ஒர்க்


சாதனைத் தமிழன் சர்வதேச விருது பெற்றார் போதகர் பெவிஸ்டன்