வேலூர்; 03.02.2021

இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டு பேசிய அறிக்கையின் விவரங்கள்

1. இஸ்லாமிய உலமாக்களுக்கு நல வாரியம் இருப்பதுபோல் கிறிஸ்தவ போதகர்கள் நலவாரியம் அமைக்க.

2. வேலூர் மாநகர கல்லறைத் தோட்டம் இரண்டரை ஏக்கர் ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியர் சொன்னதன் அடிப்படையில், இரண்டரை ஏக்கர் நிலம் போதாது ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும்.

3. வேலூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் கிறிஸ்துவ பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகளை தனியார் பள்ளிகளை செய்வதற்கு வலியுறுத்த வேண்டும் என்றும்

4. சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கிற வங்கி கடன்கள் உண்டான அரசாங்க பணி செய்கிறவர்கள் பிணை கொடுக்க வேண்டும் என்கிற சரத்தை தளர்த்த வேண்டும்.

5. வேலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அத்தனை தாலுகாக்களில் கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறை தோட்டங்களை ஒதுக்க வேண்டும்.

6. குடியாத்தம், பேரணாம்பட்டு இந்த பகுதிகளில் பாலிடெக்னிக் உள்ளது ஆனால் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் அணைக்கட்டு தாலுக்கா பள்ளிகொண்டாவில் பாலிடெக்னிக் கொண்டு வரவும்.

7.மத்திய அரசின் மூலமாய் சிறுபான்மையினருக்கு கொண்டு வந்த நல திட்டங்களில் மூன்று திட்டங்களுக்கு இஸ்லாமிய தலைவருடைய பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது, அதைப்போல கிறிஸ்துவ தலைவர்களுடைய பெயர்களை சில திட்டங்களுக்கு இடவேண்டும், உதாரணத்திற்கு, ஐடா ஸ்கடர் அம்மையார், அன்னை தெரசா.

8. சிறுபான்மை மக்களாகிய நமக்கு இதுவரை வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் என்ன, என்ன, என்பதை சிறுபான்மை தலைவர்களாகிய நமக்கு ஒரு நகல் கொடுக்க வேண்டும்.

9. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மாவட்டத்தில் டிசி நிலங்கள் அதில் அமைக்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகள் மற்றும் கட்டப்பட்டுள்ள வீடுகளை அவசரகால அடிப்படையில் விற்க முடியாதபடிக்கு பத்திரப்பதிவு துறையில் தடை விதிக்கப்பட்டு இருப்பதை நீக்க.

10. சிறுபான்மை மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, மின் விளக்குகள் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும்.

என்ற 11 கோரிக்கைகளை இன்று வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கிறிஸ்தவ போதகர்கள் பலர் பங்குபெற வில்லை என்பது வருத்தமான செய்தி.