
எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீ”'””””””””””மான்?
மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள். வெறி பிடித்து பித்து பிடித்த இவர் எந்த மதத்தை சொல்கிறார். பெயரின் படியேயும் நாம் அறிந்தபடியேயும் தமிழ் மண்ணின் மதங்களை தான் தாய் மதம் என்று இவர் சொன்னால், அந்த மதங்களை குறித்து நாம் கொஞ்சம் ஞாபகம் கொள்ள வேண்டாமா? எம் தமிழ் தாய் கண்ட மதம் என்ன என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.
A. அறியாமை என்னும் தாய்
கல்லானலும் கணவன், புல்லனாலும் புருசன் என்றும், தாலியால் பிணைக்கப்பட்டு அதே தாலியை காப்பாற்ற கோயில் குளம் குட்டை என்று அறியாமையில் சுற்றி வந்த அறியாமை என்னும் தாயிடம் திரும்ப சொல்கிறாரா இந்த சீமான்.
B. தீண்டாமை என்னும் தாய்
பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நடந்தால் தீட்டு, நிழல் பட்டால் தீட்டு என்று தீட்டு தீட்டு விலகி போ விலகி போ என்று கூக்கிரலிட்டு வெறுப்பை உக்கிரமாக காட்டின மேல்வர்க்கத்தினரின் தீண்டாமையின் பெயரை சொல்லி ஒதுங்கி ஒதுங்கி போனாளே எம் தாய், அந்த தீண்டாமை தாயிடம் மறுபடியும் செல்ல சொல்கிறாரா இந்த சீமான்.
C. அடுப்பங்கரை தாய்
பெண் என்றால் வீட்டிற்குள் முடங்கி இரு. அடுப்படியில் கிடை, சமைத்துக் கொட்டு, துவைத்து போடு, கணவன் உண்டப் பின் சாப்பிடு, வெளியே வராதே, அடுப்படியில் கிட என்று ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்டு அமுக்கப்பட்டாள் எம் தாய். அந்த தாயிடம் மறுபடியும் வர சொல்கிறாரா இந்த சீமான்?
D. உடன்கட்டைத் தாய்
தன் மனைவி இறந்தால் கணவன் வாழலாம் மறுமணமும் செய்யலாம் என்ற மார்க்கம் இருக்க ஆனால் கணவன் மரித்தால் அவள் பத்தினி, கற்புள்ளவள் என்று நீருபிக்க தன் கணவனின் சமாதியிலே உடன்கட்டை ஏறி செத்துப் போக கட்டளை பெற்றாளே எம் தாய், அந்த தாயிடம் திரும்ப சொல்கிறாரா இந்த சீமான்?
E. தேவதாசியாகிய தாய்
வீட்டுக்கு ஒருத்தி இறைத் தொண்டு என்று கோயில்களில் புஜாரியின் காலை தொட்டு புனித வழிபாடு செய்கின்றோம் என்று இறை மக்கள் என்ற மாக்களுக்கு தங்கள் உடலையே விலை மாதாக கொடுக்க தள்ளப்பட்டு போனாளே எம் தாய் அந்த தாயிடம் திரும்பி வர சொல்கிறாரா இந்த சீமான்.
F. முலை வரிக் கொடுத்த தாழ்ந்த ஜாதீய தாய்
மேல் சட்டை நீ போடக் கூடாது. அப்படி போட்டால் எனக்கு கொடு வரி. அதையும் மீறி அப்படி மேல் சட்டை அணிந்தால் வதைக்கும் கொடூர எண்ணம். கண்ணியம் இழந்தவனின் கண்களை குளிர்விக்க மேலாடை களைதல் என்கிற திட்டத்தை கொண்டு வந்து எம் தாயின் நிர்வாணத்தை வாய்பிளந்து பார்க்க வைத்த அந்த தாயின் மதத்திற்கு திரும்ப சொல்கிறாரா இந்த சீமான்?
G. வசீகரா சிற்பத் தாய்
எம் தாய் குலத்தை காட்ச்சிப் பொருளாக்கி, கலை என்று சொல்லி கோயில் கட்டங்களில் கூட விட்டு வைக்காமல் நிர்வாணப் படுத்தி பூமிக்கு அவள் பெயர் கொடுத்து, வீரத்திர்க்கு அவள் பெயர் கொடுத்து அவள் அங்கங்களை அங்கம் அங்கமாக ரசிக்க எல்லா தந்திரமும் செய்து எம் தாய் குலத்தை வசீகர பதுமையாக மாற்றி அல்ப சுகம் கண்ட தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறாரா இந்த சீமான்?
ஒரு பாரதியாக இருக்கட்டும், ஒரு பாரதிதாசனாக இருக்கட்டும், ஒரு ராஜா ராம் மோகன் ராயாக இருக்கட்டும், ஒரு அன்னி பெசன்ட் அம்மையாராக இருக்கட்டும், ஒரு காந்தியாக கூட இருக்கட்டும், ஒரு ஈ வே ரா வாகவும் இருக்கட்டும், ஒரு விவேகானந்தராக இருக்கட்டும். தேடிப் பாருங்கள். அவர்கள் ஒன்றில் கிறிஸ்தவ நாட்டில் கற்று இருப்பார்கள், இல்லையெனில் கிறிஸ்தவ மிஷனரிகளின் தொடர்பில் இருந்து இருப்பார்கள். அதையும் தாண்டி கிறிஸ்தவ வேதத்தை கிறிஸ்துவைப் பற்றி கேள்விப் பட்டு கற்று இருப்பார்கள். கிறிஸ்துவின் வார்த்தையை கேட்டு இருப்பார்கள். கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குறித்து பிறர் சொல்லக் கேட்டு இருப்பார்கள். அதினால் தான் அவர்களால் இப்படிபட்ட தாய்களை கொண்ட மதத்தில் கொஞ்சமாவது சமூக மாற்றங்களை கொண்டு வர முடிந்தது.
இன்னும் கிறிஸ்தவ நாடுகளின் மோகம் யாரை விட்டது? ஏன் அங்கு போக காத்து இருக்க வேண்டும்? வாழ்வில் உள்ள சுதந்திரத்தையும் வாழ்வின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுய மரியாதையையும் கொடுப்பதால் அல்லவோ? எனவே தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் சீர்திருத்தவாதிகள் திரும்பின கிறிஸ்துவின் வழியில் நீங்கள் வர வேண்டுமே அன்றி நாங்கள் இந்த சீமான் அழைக்கும் அதாவது அழிக்கும் மேற்கூறப் பட்ட தாய் மதத்திற்கு திரும்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சீமான் அவர்களே கிறிஸ்தவ கைக்கூலி என்று அழைக்கப்பட்ட நீர் இத்தனை சீக்கிரம் இந்துதுத்துவா கைக்கூலி என்று வர்ணிக்கப் பட்டது ஏனோ? நடந்து முடிந்த ஊராட்சி தேர்தல் முடிவுகளின் எரிச்சல் தானோ? வாழ்வில் ஏற்றம் காண்பீர் என்று நினைத்தோம். இத்தனை சீக்கிரம் சறுக்கி விட்டீர்.
செலின்