உக்ரைன்; 25, பிப்ரவரி 2022

உக்ரைன் மற்றும் ரஷ்யா தேசங்களுக்கிடையே அதிபயங்கரமான போர் உருவாகியுள்ளது. நட்பு நாடுகள் கைகொடுக்க தயங்கும் இத்தருணத்தில் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள இயலாமல் உக்ரைன் அதிக தாகுதலை எதிர்கொண்டு வருகிறது.

வான்வெளி தாக்குதல், கடல்வழி தாக்குதல், தரவழி தாக்குதல் என சுற்றிவளைந்து தாக்குகிறது ரஷ்ய ராணுவம். எங்கும் குண்டு மழை பொழிகிறது. பல பட்டணங்கள் இன்று சுடுகாடாய் மாறிவிட்டது. மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள இரவு பகல் தூக்கமின்றி கூட்டம் கூட்டமாய் அங்கும் இங்கும் ஓடி அலைகின்றனர்.

இந்த போரினால் உலக பொருளாதாரம் மீண்டும் முடங்க வாய்ப்புள்ளதாகவும், இது உலகளாவிய போராக உருமாற அதிக வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது.

இதனையடுத்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா குண்டுமழை பொழிந்து வருகிறது. மேலும் உக்ரைனின் ராணுவ தலைமையக கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியது. மேலும் உக்ரைன் ராணுவ மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடங்களாகப் பார்த்து தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.

உக்கிர தாக்குதல்:

இதனை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அதேபோல ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் கூறியுள்ளது.

இந்த தருணத்தில் நாம் என்ன செய்ய போகிறோம்? இதை ஒரு செய்தியாக மட்டும் பார்த்துவிட்டு போகாமல் அவசர ஜெபக்குறிப்பாக பாருங்கள்.

உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் இந்த செய்தியினை பகிர்ந்து கொள்ளுங்கள். உலகமெங்கும் ஜெபிக்கும் கரங்கள் ஒன்றிணையட்டும்.

Quote of the Day - The Caliverse

நெஞ்சை பதபதைக்க வைக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது

இரவில் பொழிந்த குண்டு மழை – பிரத்தியேக காட்சிகள்


வான்வெளி தாக்குதல் – பிரத்தியேக காட்சிகள்


விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு – பிரத்தியேக காட்சிகள்


உக்ரைனில் வசிக்கும் தமிழர்களின் கனிவான கவனத்திற்கு:

அவசர தொலைபேசி எண்கள்:

நீங்கள் பாதுகாப்புடன் தங்கள் தாய்நாடு திரும்ப உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

உக்ரைன் நாட்டில் உள்ள தமிழர்கள் உதவிக்கு அழைக்க வேண்டிய அவசர தொலைபேசி எண்கள்:
இணைப்பு: 04428515288
தொலைபேசி: 9600023645
தொலைபேசி: 9940256444
இணையம்: www.nrtamils.tn.gov.in

தமிழ்நாடு இல்லத்தை தொடர்பு கொள்ள:
தொலைபேசி: 919289516716
மின்னஞ்சல்: [email protected]

உக்ரைன் வாழ் இந்தியர்களின் உதவிக்கு தொடர்பு கொள்ள இந்திய அரசு வெளியிட்ட தொடர்பு எண்கள் :
தொலைபேசி: +380997300420
தொலைபேசி: +380997300483

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள்:
தொலைபேசி: +911123012113
தொலைபேசி: +911123014104

டெல்லி சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடர்பு தொலைப்பேசி எண்:
தொலைபேசி: 1800118797


உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் இந்த செய்தியினை பகிர்ந்து கொள்ளுங்கள். உலகமெங்கும் ஜெபிக்கும் கரங்கள் ஒன்றிணையட்டும்.