தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் சாதி பாகுபாடு.
சாதிக்கொரு ஆலயம், சாதிக்கொரு கல்லறை, சாதிக்கொரு சவ வண்டி, வழிபாடு மற்றும் ஆலய நிர்வாத்தில் தலித்துகள் பங்கேற்க தடை
என தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை தமிழக தலித் கிறித்தவ இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளார் திரு. ஞா. மேத்யு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.


நாள்: 29.06.2021
இடம்: சென்னை

போப்பாண்டவரின் தலைமையின் கீழ் இயங்கும் கத்தோலிக்க மத அமைப்பிக்கு இந்திய மற்றும் தமிழக கத்தோலிக்க ஆயர்கள் பேரவை என்ற நிர்வாக அமைப்பும், நுன்சியோ என்ற போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி ஒருவரும், கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என்ற மத தலைவர்களும் உள்ளனர். இந்தியாவில் 174 மறை மறைமாவட்டங்களும், தமிழக்கத்தில் 18 மறை மாவட்டங்களும் உள்ளன. ஒவொரு மறை மாவட்டத்திற்கும் ஒரு ஆயர் எனவும் சில மறைமாவட்டங்களை உள்ளடக்கி சில பேராயர்களையும் கொண்டு கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் துணை ஆயர்கள் உட்பட 180 ஆயர்கள் உள்ளனர். இவர்களில் 10 பேரும், தமிழ் நாட்டில் உள்ள 18 ஆயர்களில் ஒருவர் மட்டுமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழ் நாட்டில் 3 பேராயர்களில் ஒருவர் கூட தலித் பேராயர் இல்லை. இந்திய அளவில் 31 பேராயர்கள் உள்ளனர், இவர்களில் 2 பேர் மட்டுமே தலித் கிறித்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள். மிக உயர்ந்த பதவியான கர்தினால் என்னும் பொறுப்பில் 4 பேர் உள்ளனர், இவர்களில் ஒருவர் கூட தலித் இல்லை.

தமிழக்கத்தில் கடந்த 14 ஆண்டுகளில் 10 ஆயர்கள், பேராயர்கள் நியமனம் நடந்துள்ளது. இவர்களில் ஒருவர் கூட தலித் சமூகத்தை சார்ந்தவர் இல்லை. இந்திய கத்தோலிக்க கிறித்தவர்களில் சுமார் 80%, தமிழ் நாட்டில் சுமார் 70% தலித் கிறித்தவர்கள். மீதமுள்ள 30% கிறித்தவர்கள் 25 வகையான ஆதிக்க சாதிய சமூகத்தை சார்ந்தவர்கள். அப்படியானால் தமிழக கத்தோலிக்க திருச்சைபை ஆயர் மற்றும் பேராயர் நியமனங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால் “சாதி பிரிவினைகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும்” என்று போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் அவர்களும், “ஒவ்வொரு நாடும், வட்டாரமும் அதனதன் கலாச்சாரத்திற்கு பொருத்தமான தேவைகளையும் அதற்கான தீர்வுகளையும் அறிந்து பெறுவது சாத்தியமே’ என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களும் கிறித்தவ சமூகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

தலித் கிறித்தவர்கள் சாதி இந்துக்களால் மட்டும் அல்ல சாதி கிறித்தவர்களாலும் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். எனவே 80% க்கும் மேல் உள்ள தலித் கிறித்தவர்கள் அதிகார மையத்திற்கு வர வேண்டும் என்று கடந்த 2008 ம் ஆண்டு போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி நுன்சியோ அறிவுரித்தியுள்ளார். இந்திய திருச்சபையில் தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கர்தினால் பிலோனி அவர்கள் 10.02.2013 அன்று தெளிவாக விளக்கியுள்ளார். தலித் கிறித்தவர்கள் திருச்சபையின் அனைத்து அதிகார மையங்களுக்கும் வர வேண்டும் என்பதை 13.12.2016 அன்று வெளியான இந்திய ஆயர் பேரவையின் கொள்கை வரைவு வலியுறித்தியுள்ளது. இதற்கு முன்னதாகவே தமிழக ஆயர் பேரவை கடந்த 1990 ம் ஆண்டு வெளியிட்ட 10 அம்ச திட்டமும் 2004 ம் ஆண்டு 8 அம்ச செயல் திட்டமும் இதே கருத்தை சொல்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக இந்திய மற்றும் தமிழ் நாடு ஆயர்கள் பேரவையின் அனைத்து அறைக்கூவல்களும், பிரனகடனங்களும், அறிக்கைகளும் கிறித்துவத்தில் சாதி பாகுபாடு உள்ளது, தீண்டாமையின் வடிவங்கள் தொடர்கிறது, அதற்காக கத்தோலிக்க திருச்சபை மன்னிப்பு கோரியதோடு, அதற்கான பரிகாரங்களையும் முன்மொழிகிறது. தலித் கிறித்தவர்கள் அதிகார மையத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும் என்பதுதான் ஆயர்கள் பேரவையின் உச்ச பட்ச பரிந்துரை. எனவே இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவைகளின் வாக்குறுதிகளின்படி விகிதாசாரத்தை எட்டும் வரையில் இனி வரும் அனைத்து ஆயர் பணியிடங்களிலும் குறிப்பாக தற்போது காலியாக உள்ள மற்றும் விரைவில் காலியாகவுள்ள மறை மாவட்டங்களிலும் தலித் ஆயர்கள் மற்றும் பேராயர்களை பணியமர்த்த வேண்டுமென அனைத்து தலித் கிறித்தவர் இயக்ககங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த 31.05.2021 சேலம் மறைமாவட்டத்திற்கு ஆதிக்க சாதி சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஆயராக நியமனம் செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த நிலையில்தான், தமிழக தலித் கிறித்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஞா. மேத்யு என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். தமிழ் நாடு முழுவதும் சுமார் 151 கிராமங்களில் சாதி அடிப்படையில் இரண்டு கோயில்கள், இரண்டு கல்லறைகள், இரண்டு பின ஊர்திகள், தலித்துகளிடம் கோயில் வரி வசூலிக்க மறுப்பு, திருவிழா தோரோட்டம் தலித் தெருக்களுக்கு செல்ல தடை, சர்ச் நிர்வாகத்தில் தலித்துகள் பங்கேற்க தடை, வழிபாட்டு உதவி பணிகளில் தலித் குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு என தீண்டாமை கொடுமைகள் தொடர்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், திருச்சபை கொள்கைகளுக்கும், ஐ. நா. சபை உள்ளிட்ட பன்னாட்டு விதிகளுக்கும் முற்றிலும் எதிரான இந்த தீண்டாமை வடிவங்கள் களையப்பட வேண்டும் என்று அந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. 25.06.2021 அன்று இந்த வழக்கினை (W.P.No.13220/2021) விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம், இந்திய, தமிழக மற்றும் புதுச்சேரி அரசு உயர் அதிகாரிகளும், இந்திய, தமிழக ஆயர்களும் வரும் 08.07.2021 க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது..

இவண்
டாக்டர். ஞா.மேத்யு
திரு. பே. பெலிக்ஸ் – 9443073133
ஒருங்கிணைப்பாளர், கிறித்தவ மக்கள் களம்
Email: [email protected]
தமிக தலித் கிறித்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (தமிழ் நாடு & புதுவை)

தேசிய தலித் கிறித்தவர் பேரவை (NCDC), தலித் கிறித்தவர் விடுதலை இயக்கம் (DCLM), தேசிய தலித் கிறித்தவர் கண்காணிப்பகம் (NDCW), கிறித்தவ மக்கள் களம், அம்பேத்கர் பெரியார் சமூக நீதி பாசறை, கிறித்தவ அருந்ததியர் உரிமை இயக்கம், தமிழக கத்தோலிக்க சமத்துவ இயக்கம், தலித் கிறித்தவர் விடுதலைக்கான மாற்று முன்னணி, தலித் கிறித்தவர் இயக்கம், தமிழக கிறித்தவ கடையர் மக்கள் கூட்டமைப்பு, துரும்பர் விடுதலை இயக்கம், மக்கள் மேம்பாட்டு முன்னணி, தலித் கிறித்தவர் ஆசிரியர் அலுவலர் நலசங்கம்