விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையின் வழியில் உள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்கு, சமத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

 JANUARY 23, 2022, 11:22 IST

விழுப்புரம் : கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்!

விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையின் வழியில் உள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்கு, சமத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

சி.எஸ்.ஐ நிர்வாகத்தால் கட்டப்பட்ட இத்தேவாலயத்தின் சிறப்பு என்னவென்றால் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என மூன்று மதங்களையும் போற்றும் வகையில், எம்மதமும் சம்மதம் என்று சமத்துவத்தை பொதுமக்களிடையே உணர்த்தும் வகையில் இந்த தேவாலயத்தின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அடித்தளத்தில் கருங்கற்களால் ஆன இந்து கோயில்போல் அடித்தளமும் அதனை சுற்றிலும் மசூதியில் உள்ள தூண்கள் போல நான்கு தூண்கள் உள்ளன. மேலும் இந்த தேவாலயத்தில் மேல் தளம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தில் கட்டப்படும் தேவாலயம் போலவும், அதன்மேல் இந்துமதத்தில் கட்டப்படும் ராஜகோபுரமும், அதன்மீது கிறிஸ்தவ சிலுவையும் கொண்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

இந்த தேவாலயத்தைப் பார்க்கும்போதே மக்களிடையே இயற்கையாக சமத்துவ உணர்வு ஏற்படும்.

இங்கு அதிகளவில் பொதுமக்கள் வருகை புரிந்து தேவாலயத்தின் வழிபட்டு செல்கின்றனர். இதுபோன்ற கட்டமைப்பு உடைய தேவாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை. புதிதாகவும், புதிய சிந்தனையுடனும் கட்டப்பட்ட இந்த தேவாலயம் பொதுமக்களிடம் ஒரு ஈர்ப்பையும் மத நல்லிணக்கத்தையுன் ஏற்படுத்தியுள்ளது.