கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன?

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன?

புதுடெல்லி: “Merry Christmas” என்று வாழ்த்து கூறும் வழக்கம் குறைந்தது 1565 ஆம் ஆண்டில் தொடங்கியதாம்… 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், “Merry” என்ற வார்த்தை இன்றைக்கு இருப்பதை விட மிகவும் பிரபலமானதாக இருந்திருக்கிறது.

ஜனவரி முதல் நவம்பர் வரை நாம் வாழ்த்தும்போது வழக்கமாக “Happy” என்ற வார்த்தையுடன் வாழ்த்துக்களை தொடங்குகிறோம். ஆனால் கிறிஸ்துமஸ் வாழ்த்து மட்டும் “மெர்ரி கிறிஸ்மஸ்” என்று வார்த்தைகளை மாற்றி வாழ்த்தும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. இதற்கான காரணம் தெரியுமா?

ஏன் “Happy Christmas” என்று வாழ்த்துவதில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த கலாசாரம் எப்படி உருவானது? உண்மையில், வேறு எந்த சந்தர்ப்பத்திலும் ”மெர்ரி” என்று வாழ்த்தாத நிலையில் கிறிஸ்துமசுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு என்று பகுத்தாய்ந்து இருக்கிறீர்களா?

சரி, யாராவது  Merry பிறந்த நாள் (Birthday), Merry தீபாவளி (Diwali) அல்லது Merry புத்தாண்டு (New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவித்தது உண்டா?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் இல்லை என்ற பதில் தான் அநேகரிடம் இருக்கும். “மெர்ரி கிறிஸ்மஸ்” வாழ்த்து குறைந்தது 1565ஆம் ஆண்டுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. 

1565ஆம் ஆண்டில் Hereford Municipal Manuscript இவ்வாறு எழுதுகிறார்: “And thus I comytt you to god, who send you a mery Christmas & many.”  இதன் பொருள், “உங்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் பலவற்றை அனுப்பும் இவ்வாறு நான் உங்களை கடவுளிடம் வரவேற்கிறேன், அவர்கள்.” 1843 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சார்லஸ் டிக்கென்ஸின் (Charles Dickens) ஒரு கிறிஸ்துமஸ் பாடலில், Merry Christmas என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

வணிக ரீதியாக விற்கப்பட்ட முதல் கிறிஸ்துமஸ் அட்டையில் (Greeting Card) 1843 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது) “Merry Christmas மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. ஏழை மக்களுக்கு உணவளிக்கும் மற்றும் ஆடைகளை வழங்கும் வசதியான குடும்பத்தின் புகைப்படம் அந்த வாழ்த்து அட்டையில் இடம் பெற்றிருந்தது.  

Thanks: zeenews.india.com