கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள்/ விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை:
News
  
Tamil Nadu
  

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள்/ விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை:

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்கும் போது போதகர்கள் விசுவாசிகள் கடைபிடிக்க வேண்டியவை

ஜூலை 6 முதல் கிராமபுறங்களில் உள் சிறிய அளவில் உள்ள வழிபாட்டு தலங்களை ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் குறைவான சிறு தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் தேவாலயத்தை திறக்கும் போது கடைபிடிக்க வேண்டியவைகளை அனைத்து சபை தலைவர்களும் (போதகர்கள், ஆயர்கள், குருமார்கள்) சபை ஊழியர்களும், சபை உறுப்பினர்களும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

1) நாள்தோறும் தேவாலயத்தை கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்க வேண்டும். வளாகத்தை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

2) தேவாலயத்திற்கு மக்கள் வரும் போது தங்கள் கைகளை கால்களை சனிடைசர் (கிருமி நாசினி தண்ணீர்) கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். கை கால்களை துடைக்க அவரவர் தங்கள் வீடுகளிலிருந்தே துணி கொண்டு வருவது நல்லது. ஒருவர் துடைக்க பயன்படுத்தும் துணியை மற்றவர் பயன்படுத்த கூடாது.

3) தேவாலய வழிபாட்டில் கலந்து கொள்ளும் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் (முககவசம்) அணிந்திருக்க வேண்டும். மாஸ்க் அணியாதவர்களை தேவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்க கூடாது. போதகர்களும் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

4) தேவாலய வழிபாட்டிற்கு வரும் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் (லேசர் முறையில் காய்சல் பார்க்கும் கருவி) கொண்டு பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

5) காய்சல் போன்ற கொரோனா அறிகுறி இருப்பவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது.

6) கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பான விஷயங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் பேனர், நோட்டிஸ், வால்போஸ்டர்கள் (சுவரொட்டிகள்) தேவாலயங்களில் வைக்க வேண்டும்.

7) தேவாலயங்களில் சமூக விலகல் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேவாலயத்திற்கு உள்ளே சமூக இடைவெளியை பின்பற்றி, அதாவது 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் செல்ல வேண்டும். ஆலயத்திற்கு உள்ளே நிற்கும் போதும் அமரும் போதும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.

8) தேவாலயத்தின் உள்ளே மக்கள் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் தரையில் (வட்டம், சதுரம்) அடையாளங்கள் வரைந்திருக்க வேண்டும்.

9) கற்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் சமூக நலன் கருதி தேவாலய வழிபாட்டில் பங்குபெற அனுமதி இல்லை.

10) பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் பாடல் புத்தகங்கள், வேதாகமங்கள் பயன்படுத்த கூடாது. அவரவர் தங்களுக்குரியதை தங்கள் வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும்.

11) பாடகர் குழு அமைக்க தற்போது அனுமதி இல்லை. ஔிபதிவு செய்யப்பட்ட பாடல்களை பயன்படுத்தலாம். குழுவாக ஒன்றிணைந்து பாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

12) தேவாலயத்தில் ஒருவருக்கொருவர் கட்டியணைப்பது, கைகுழுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாறக ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்தை ஸ்தோத்திரங்களை கை கூப்பி தெவித்துகொள்ளலாம்.

13) தேவாலயத்தில் பொதுவான தரை விரிப்புகள் (பாய்கள்) பயன்படுத்தக்கூடாது. அவரவரே எடுத்து வர வேண்டும்.

14) ஆராதனை முடிவில் போதகரிடம் ஜெபிக்க வரும்போது சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். போதகரும் சமூக நலன் கருதி யார் மேலும் கைவைத்து ஜெபிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

15) தேவாலயத்தில் ஐக்கிய உணவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிருந்து, ஞானஸ்நானம் போன்றவைகளும் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

16) ஆலய வழிபாடு முடிந்ததும் தேவாலயத்தின் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினி கொண்டு மிக நேர்த்தியாக சுத்தம் செய்திருக்க வேண்டும்.

17) ஆயத்திலுள்ள எவ்வித பொட்களையும் தொடக்கூடாது. புனித நீர் தெளிப்பது, மெழுகுவர்த்தி ஏற்றுவது, கைகளில் பிரசாதம் கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

18) பங்கேற்பாளர்கள் பயன்படுத்திய முககவசங்கள்/ குப்பைகளை பொதுவான குப்பை தொட்டிகளில் போட கூடாது.

19) பங்கேற்பாளர்கள் தங்கள் காலணிகளை தங்கள் வாகனத்திலோ அல்லது எந்தவிதத்திலாவது தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் பயன்படுத்துகிற பொதுவான இடங்களில் போட அனுமதி இல்லை.

20) அருகில் உள்ள காவல் நிலையங்களோடும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகளோடும் நல்லுறவை வளர்த்துக்கொண்டு செயல்படுவது நல்லது.

மேற்கண்ட காரியங்களை கைபிடிக்க முறையான ஆயத்தங்கள் மேற்கொண்ட பிறகு தேவாலயங்களை (கிராமபுறங்களில் உள்ளவைகள்) திறக்கலாம். இவைகளை செய்ய தவறும் பட்சத்தில் சபை சீல் வைககப்படலாம். அல்லது போதகர் கைது செய்யப்படலாம்.

மொத்தத்தில் அரசு விதிமுறைகளை மீறம் பட்சத்தில் நீங்கள் அரசை ஏமாற்றவில்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளுகிறீர்கள் என்று தான் பொருள். தெய்வீக சுகத்தை 100 சதவீதம் நாம் விசுவாசக்கிறோம். எனினும் ஞானமாய் நடந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையையும் பரிசுத்த வேதாகமம் முக்கியப்படுத்துகிறது. நம்முடைய கவன குறைவினால் நம் மூலமாகவோ, நம் சபை மூலமாகவோ சமூகத்திற்கு ஒரு பாதிப்பு வந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருங்கள்.

இந்த செய்தியை உங்கள் சபை ஜனங்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். தகுந்த ஆயத்தங்களோடு அவர்களும் பங்குபெறட்டும்.

Post Tags: