கரூர் மாவட்டம் செம்மடை பகுதியை சேர்ந்த சபை விசுவாசி சந்தோஷ் குமாரை மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு

கரூர் மாவட்டம் கடப்பாரை ஊராட்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கடந்த 5 வருடமாக கரூர் டவுண் சின்ன ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருகிறார்.

கடந்த 1 ந் தேதி ஞாயிற்று கிழமை வெகுநேரமாகியும் ஆலயத்திற்கு வராத சந்தோஷ்குமாரை சபை விசுவாசி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். இரவு பணி இருந்த காரணத்தினால் ஆலயத்திற்கு வர முடியவில்லை என தெரிவித்துள்ளார். சரியாக 1 மணியளவில் வீட்டில் இருந்து ஆலயத்திற்கு கிளம்பிய சந்தோஷ்குமாரை மர்ம நபர்கள் 4 பேர் சேர்ந்து தாக்கி அவரை அங்கிருந்து தூக்கி சென்று காட்டு பகுதியில் வைத்து நீ ஏன் மதமாற்றத்தில் ஈடுபடுகிறாய் என தெரிவித்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர் உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.. மயக்கம் தெளிந்த சந்தோஷ்குமார் காவல் நிலையத்திற்கு (100 போன் செய்து) தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் 108 க்கு போன் செய்யும்படி கூறியுள்ளனர். பிறகு 108 ஆம்புலன்ஸ் போன் செய்துள்ளார். 30 நிமிடம் கிழித்து ஆம்புலன்ஸ. ஊழியர்களால் மீட்கப்பட்டு பலத்த காயத்துடன் சந்தோஷ்குமார் கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது முகத்தாடையில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் அறுவை சிகிச்சை விரைவில் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதமாற்றம் செய்வதாக தவறான தகவலை கூறி கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனுவை தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அளித்துள்ளார்.

காயத்துடன் சந்தோஷ் குமார்
புகார் மனு.
CT ஸ்கேன் ரிப்போர்ட்

World Tamil Christian Association lodges complaint with police to arrest mysterious attackers for proselytizing

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை அனைத்து மத வழிப்பாடு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை