அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களை அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.

கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த பல பேர் இரண்டு திராவிட கட்சிகளிலும் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருந்தாலும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆவது இரண்டு பிரதான கட்சியான அதிமுக, திமுக குறைந்தது 40 தொகுதிகளில் போட்டியிட கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

மத்திய அரசின் சார்பில் இந்தியா முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு சிறுபான்மை மக்கள் தொகை 25 சதவிதம் அதிகமாக வசிக்கும் பகுதிகளாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி . தென்காசி, புதுக்கோட்டை’. நாகப்பட்டினம், கரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல். கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்ட மன்ற தொகுதிகளில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். என கூறும் இரண்டு திராவிட கட்சிகளும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை விடுத்துள்ளார்