
விவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து

உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து செய்தி
பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும், கலந்து பொங்குவதைப் போன்று நமது வாழ்க்கையில் தூய்மையான அன்பும், பாசம், எல்லா வளங்களும் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக இந்த நாள் அமைய வேண்டும். நல்ல காரியங்கள் செய்தால் மகிழ்ச்சி பிறக்கிறது பிறக்கும் தைத்திருநாள் முதல் நல்ல காரியங்களை செய்வோம் – ஒளி, ஞானம் இவ்விரண்டையும் வரவேற்க மனதைத் தயார் செய்வோம் வெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு அனுபவிக்கும் நாள் தை திருநாள். விவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை உருவாக உழைத்திடுவோம் என்ற உறுதியோடு நாம் அனைவரும் தொடங்கும் புது வாழ்க்கை இந்த பொங்கலாக அமைய உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.