மன்னார்குடியில் கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி, பிப்ரவரி 13,  2021

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஆலயத்தின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றார்.

அப்போது உண்டியலை உடைக்கும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு ஆலயத்துக்கு சென்று உண்டியலை உடைத்து திருட முயன்ற அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது22) என்ற வாலிபரை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நன்றி: தினதந்தி