கடைசி காலத்தில் தன்னைத்தானே கடவுள் என்றும் தான் கடவுளுக்கு இணையானவன் என்றும் கூறி மக்களை தன் பக்கம் ஈர்த்து வஞ்சிக்கும் கூட்டம் பெருகும் என்பதை பரிசுத்த வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக கூறியுள்ளது.

இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது இயேசுவைப்போல மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் எனக்கூறி தற்போது தோல்வியை சந்தித்துள்ளார் ஆப்பிரிக்காவின் ஜாம்பியா நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் சக்காரா.

22 வயதான இவர், இயேசுவின் தூதுவராகவும் தன்னை இயேசுவுக்கு நிகராக நினைத்துக் கொண்டார். சீயோன் சபையில் பணியாற்றி வந்த இவர் மக்களை தன் பக்கம் ஈர்க்க ஒரு மோசமான முடிவை அறிவித்தார். இயேசு கிறிஸ்து எப்படி மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பினானாரோ அது போலவே தானும் எழும்புவேன் என்று கூறி தன்னை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து வைக்குமாறு கூறினார்.

இவரது மோசமான முடிவிற்கு ஆதரவு தெரிவித்த மூன்று பேர் இவரது அறிவுரையின்படி மண்ணுக்குள் புதைத்து வைத்தனர். மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக வீடியோவாகவும் பதிவு செய்தனர். மண்ணுக்குள் புதைத்த மூன்று பேரும் சரியாக மூன்று நாளுக்குப் பின்பு ஊரில் உள்ள அனைவருக்கும் விஷயத்தை சொல்லவே, மக்களும் ஆர்வத்துடன் பார்க்க வந்தனர்.

கிறிஸ்துவுக்கு இணையாக தன்னை காட்டியவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் தோண்டியபோது உள்ளே அவரது பிணம் தான் மிஞ்சி இருந்தது. ஆம், இயேசுவுக்கு நிகராக உலகில் ஒருவரும் வர முடியாது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் மண்ணில் வைத்து மூடி அவர்களை கைது செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மரித்துப்போன 22 வயதாகும் நபர் ஜேம்ஸ் சக்காரா என்பவருக்கு சமீபத்தில் திருமணமாகி, தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயேசு அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார் என மக்களை வஞ்சிக்கும் கூட்டம் கடைசி காலங்களில் எழும்பும் என்பது வேதம் கூறும் கடைசி கால அடையாளங்களில் ஒன்று.

தன்னை நான் கடவுள் என்றும் கடவுளுக்கு நிகரானவன் என்றும் கூறும் நபர்கள் பெருகி வரும் இந்நாட்களில் ஒருவரும் நம்மை எச்சரிக்கையாக இருப்போம். தேவனின் வருகை மிக சமீபம். ஆகவே இதுபோன்ற நூதனமான உபதேசங்களுக்கும், கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கும் நம்பி மோசம் போகாமல் வேதாகமம் கற்பிக்கும் மெய் சத்தியத்தை அறிந்து சாட்சியாய் நிற்போம்.. பரலோகம் சேர்வோம்..

இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். இது ஒரு எச்சரிப்பின் காணொளி.. நன்றி