• Wednesday 16 April, 2025 02:50 AM
  • Advertize
  • Aarudhal FM
மாணவர்களுக்கு புத்தக பையில்லா தினம்

மாணவர்களுக்கு புத்தக பையில்லா தினம்

30 Jul 2024 15:02

கல்வியாண்டில் 10 நாட்கள் மாணவர்கள் புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வந்து மற்ற தொழில் மற்றும் அறிவு சார் திறனங்களை கற்றுக் கொள்ள ஊக்குவிக்கப் பட வேண்டும் என என்.சி.இ.ஆர்.டி கூறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ல், அனைத்து வகுப்பு மாணவர்களும் கல்வி ஆண்டில் 10 நாட்கள் புத்தக பையில்லா வகுப்பில் பங்கேற்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தக பையில்லா தினங்களை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் புத்தகத்தை தாண்டி பலதரப்பட்ட அறிவுத் திறன்கள் பெறவும், புத்தக அறிவுக்கும்- செயல்பாட்டு அறிவுக்கும் இடையேயான எல்லைகளை குறைக்கும் நோக்கத்துடனும் புத்தக பையில்லா தினம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் மாணவர்களுக்கு தச்சு, மின்சார வேலை, உலோக வேலை, தோட்டக்கலை, மண்பாண்டங்கள் செய்தல் போன்ற கைவினைத் தொழில்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை காண்பித்து சொல்லிக் கொடுக்கலாம். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதை கற்றுக் தர முன்கூட்டியே யோசித்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஓராண்டில் 10 புத்தக பையில்லா நாட்களை பள்ளிக்குத் தகுந்தாற் போல் பிரித்துக் கற்றுக் கொடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Credit

இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.

Disclaimer

மேற்கண்ட உள்ளடக்கத்தின் பதிப்புரிமை எங்களுடையது அல்ல. எழுத்தாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் எங்களிடம் மின்னஞ்சல் வாயிலாக உரிமை கோரும் பட்சத்தில் இந்த உள்ளடக்கம் இந்த இணையதளத்திலிருந்து முற்றிலும் நீக்கப்படும். நன்றி