நீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை

மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்தார்.
பதிவு: டிசம்பர் 26, 2020 05:38 AM
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் ராணி எலிசபெத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பலர் விரும்புவது ஓர் எளிய அரவணைப்பு. தனது அன்புக்குரியோரை கொரோனா வைரஸ் தொற்றால் இழந்தவர்களுக்கு அல்லது அரசால் விதிக்கப்பட்ட தடைகளால் உறவுகளைப் பிரிந்து கிடப்பவர்களுக்கு இந்த சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும். மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் இந்த ஆண்டு தங்கள் வழக்கமான குடும்ப கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
இந்த பண்டிகை நாளில் தங்களது அன்பானவர்களின் இழப்புக்கு சிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் மக்களில் பலரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை காணவில்லை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Thanks: dailythanthi