மூக்கணாங்கயிறு!

Share this page with friends

<
மூர்க்க சிந்தைக்கெல்லாம் மூக்கணாங்கயிறு!
(யோபு 40:15,24)

இரட்டை வாழ்க்கை வாழும்
மனித இனம், இரண்டத்தனையாய்
அதிகரித்திடும் காலத்தில்
நாம் வாழ்கிறோம்

உள்ளத்தில் அகங்காரமும்
வெளியே  அலங்காரமுமாக  
வாழும் ஒப்பனையான  வாழ்க்கை முறை
இன்றைக்கு ஏதுமறியா மக்களையும்
ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.


எளிமை, தாழ்மை என்பதெல்லாம்
மக்களை மையப்படுத்தும்
அலங்கார சொற்களாகிப்போயின.

அரசியல் தலைவர்களுக்கும்
ஆன்மீகத் தலைவர்களுக்கும்

இது கைவந்த கலையாக
மாறியிருக்கிறது என்று
இப்போதுள்ள தலைமுறையினர்
முறையிடும் சூழ்நிலை
உருவாகிக் கொண்டிருக்கிறது.

உண்மையைச் சொன்னால்,
உண்மையான வாழ்க்கை வாழ
அவர்களுக்கு நேரமில்லை!


சதா கைகளைக் கூப்பிக்கொண்டு
முகங்களை மறைத்துக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

யதார்த்தமான வாழ்க்கை வாழ
அவர்கள் முயற்சித்தாலும்
இனி முடியாது.

இரவும் பகலும் மக்கள் மன்றத்தில்
மேடைகள்
அதிகமாகிவிட்டது.
இதன் நடுவே அடுத்த
ஐந்து ஆண்டுகளுக்கான
அஸ்திபாரத்தை போட
விரைந்தோடிக்கொண்டிருக்கிறார்கள்.
 
மேடை வாழ்க்கை முறை மட்டும்
மனிதனுக்கு மன மாற்றத்தை
கொண்டு வருவதில்லை.
அது நிலைப்பதுமில்லை
ஒரு உபகரணம் அவ்வளவுதான்.

மேடையை விட்டு இறங்கிய பின்
வாழ்கிறார்களே அதுதான்

உண்மை வாழ்க்கை.

மனிதனின் மனதிற்குள்
மறைந்துள்ள பயங்கரமான
பாவ சுபாவங்கள்
வெளியே தெரிவதில்லை

இப்படிப்பட்ட சுபாவமுள்ள மக்கள்
எப்போது கிறிஸ்துவுக்குள்
மனமாற்றமடைவார்கள்?


இயேசுவைப் போல் எளிமையாகவும்
தாழ்மையின் சிந்தையோடும்
வாழ்பவர்களை பார்க்கும்போது
தான்

நாம் கிறிஸ்துவைப் போல
வாழ்ந்துகாட்டுவோம்

மேடை வாழ்க்கை, உலகத்தில்
தங்களுக்கு மேன்மையைக்
கொண்டு வரலாம்,
உள்ளத்தில் மேன்மையைக்
கொண்டு வரவேண்டாமா?

கிறிஸ்துவின் இரத்தத்தால்
என் பாவம் மன்னிக்கப்பட்டது,
இயேசுவின் நாமத்தால்
நான் சுகமானேன்
என்று சொல்லி  
தங்கள் வாழ்க்கையில்
வாழ்ந்துகாட்டும் தாழ்மையுள்ள  
எளிமையான மக்களோடே
இயேசு ஜீவிக்கிறார் என்பதை
உலகம் அறிந்து கொள்ளும்
நாள் ஒன்று வரும்

எவ்வளவு உயர்ந்தாலும்
தங்களுக்குள் பகைமை உணர்வை
உண்டுபண்ணும் பிசாசின் குணத்தை

ஜெயிப்பவர் யார்?

தேவன் சொல்லுகிறார்
இப்போதும் பிகெமோத்தை (மிருகம்)
நீ கவனித்துப்பார்  
உன்னை உண்டாக்கினதுபோல
அதையும் உண்டாக்கினேன்’’,
“அதின் கண்கள் பார்த்திருக்க
அதை யார் பிடிக்கக் கூடும்?
மூக்கணாங்கயிறு போட
அதின் மூக்கை
யார் குத்தக்கூடும்’’
? (யோபு 40:15, 24)   

தேவன் ஒருவரே
அதைச் செய்யமுடியும்.

மனிதனின் பயங்கர
பாவ சுபாவங்களை அடக்கி,
மனதை மாற்றி,
தூய சிந்தையைத் தந்து
எளிய, இனிய வாழ்க்கையை
கொண்டுவருபவர்
இயேசுவேயன்றி மனிதரல்ல.  

மூர்க்க சிந்தைக்கெல்லாம்
மூக்கணாங்கயிறு போட,
முற்றிலும் நடத்திச் செல்ல
தேவன் ஒருவர் உண்டு
.
மறந்துபோகாதே!

படித்துவிட்டு, பக்கத்திலிருக்கும்
விசுவாசிக்கும்,  நண்பர்களுக்கும்,
உறவினர்களுக்கும்
அனுப்பிவையுங்கள்.

இவ்வகை அரிய செய்திகளை
அவர்களும் அறிந்துகொள்ள
இலவசமாய் உங்கள்
உள்ளங்கைகளுக்குள்
அடங்கியிருக்கும் அலைபேசியை
பயன்படுத்துங்கள். நன்றி.

பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்
போதகர் | எழுத்தாளர்
ஆசிரியர்: வழிப்போக்கனின் வார்த்தைகள்

தொகுப்பு:
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்,
ஐயர் பங்களா, மதுரை 625 014


Share this page with friends