good Ideas for Pastor Church during Lockdown

ஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு

Share this page with friends

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு  அன்பின் வாழ்த்துக்கள். சுகமாயிருப்பர்களாக!

தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு, சபைகூடி ஆராதிக்க வாசல் திறந்துள்ளார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

இப்போதும்,
கீழ்காணும் விபரங்களை கவனித்து “ஞாயிறு ஆராதனை”யில் பங்குபெறும்படி அன்புடன் கேட்கிறோம்.

1. தங்கள் சபையில் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் ஆராதனைகளில் ஒருவர் ஒரு ஆராதனையில் மட்டுமே பங்குபெறுதல் வேண்டும்.

2. தாங்கள் எந்த ஆராதனையில் பங்குபெறுவீர்கள், எத்தனை பேர் பங்குபெறுவீர்கள் என்ற விபரத்தை முன்கூட்டியே உங்கள் சபைப் போதகரிடம் தெரிவித்தல் வேண்டும்.

3. சபையில் ஆளுக்கு ஒரு நாற்காலி/கோடு வரையப்பட்ட இடம், ஒன்றுக்கொன்று 6அடி இடைவெளிவிட்டு வைத்திருப்போம். அதை இடம் மாற்றாமல் அதிலே அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

4. அரசு வழிகாட்டுப்படி, பாய் அல்லது தரை விரிப்பு விரித்திருக்க மாட்டோம்.
எனவே,
உங்கள் கையிலே ஒரு towel அல்லது விரிப்பு கொண்டுவந்து பயன்படுத்திவிட்டு, கையோடு எடுத்துச் செல்லுதல் வேண்டும்.

5. உங்கள் காலணிகளை வைப்பதற்கு ஒரு பை கொண்டுவந்து, அதிலே காலணிகளை வைத்து, உங்கள் நாற்காலிக்கு அடியில் வைத்துக்கொண்டு, போகும்போது அந்தப் பையையும் எடுத்துச் செல்லுதல் வேண்டும்.
அல்லது
– தங்கள் தங்கள் வாகனங்களில் தங்கள் காலணிகளை வைத்து விட்டு வருதல் வேண்டும்.
அல்லது
– ஒவ்வொருவரின் காலணிகளையும்  ஒரு Rack/Shelfல் தனித்தனி இடத்தில் வைத்து (கூட்டங்கூடாமல், பிறர் காலணிகளைத் தொடாமல்) எடுத்துச் செல்லுதல் வேண்டும்.

6. தங்களுக்குத் தேவையான குடிநீரை (வெந்நீர்) தாங்களே கொண்டு வந்து, அடிக்கடி அருந்திக்கொள்ளுதல் வேண்டும்.

7. மூக்கும், வாயும் மூடியிருக்கும் வண்ணம்  முகக்கவசம் அணிந்து பங்குபெறுதல் வேண்டும்.

8. திடீரென்று தும்மல், இருமல் வந்தால் முகக்கவசத்தை சற்று விலக்கிவிட்டு, ஒரு கைக்குட்டை கொண்டு மூக்கையும், வாயையும் மறைத்துக்கொண்டு செயல்படுதல் வேண்டும்.

9. Church வாசலில் வைத்திருக்கும் Hand Sanitizerஐ பயன்படுத்தி, கைகளை சுத்திகரித்து விட்டு உள்ளே வருதல் வேண்டும்.

10. Thermal Scanner மூலம் உடல் வெப்பப் பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு தருதல் வேண்டும்.

11. காய்ச்சல், சளி, தொடர் இருமல் இருப்பவர்கள் அது சுகமான பின்னரே கூட்டத்துக்கு வருதல் வேண்டும்.

12. கைகுலுக்குதல், கட்டி அணைத்தல் ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

13. சபை ஆராதனை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று பேசாமலும், அதிக நேரம் சபையில் நிற்காமலும், சீக்கிரமாகப் புறப்படுதல் வேண்டும்.

14. சபை முன்பக்கத்திலோ, சாலையிலோ, வாகனம் நிறுத்தும் இடத்திலோ 5 பேருக்கு மேல் ஒரேநேரத்தில் கூடி நிற்பதை தவிர்த்தல் வேண்டும்.
(அரசு, சில தளர்வுகளைத்தான் தந்துள்ளதேயொழிய, “தடை உத்தரவுச் சட்டம்” இன்னும் அமலில் தான் உள்ளது.)

15. சபை வளாகம், சாலை, Parking area எங்கும் எச்சில் துப்பக்கூடாது, குப்பை போடக்கூடாது.

16. காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டியில் மட்டுமே செலுத்துதல்  வேண்டும்.
(சபையின் காணிக்கை Coverக்குள் வைத்து காணிக்கைப் பெட்டியில் செலுத்தலாம்)

17. அத்துடன், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குக் கீழானோர், கர்ப்பிணிப் பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் சபைக்கு வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

நமது வேண்டுகோளுக்கு இணங்கி, சபைகூடி ஆராதிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதேயன்றி, COVID-19 நோய் பரவுதல் இன்னும் தீவிரமாகவே உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொண்டு,
உங்களது பாதுகாவல்,
பிறரது பாதுகாவல்,
சபையின் நற்பெயர்
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேற்சொன்ன அனைத்து ஆலோசனைகளுக்கும் அனைவரும் பூரண ஒத்துழைப்புத் தரும்படி மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிறைவான விசுவாசத்துடனும்,
தேவையான விவேகத்துடனும்,
பிறருக்கு எவ்வித இடறலுமின்றி
செயல்படுவோமாக!

தேவகிருபை நம்முடன் இருப்பதாக!

இது,
தமிழக அரசின் Revenue and Disaster Management (DM IV) Department வெளியிட்டுள்ள G.O (Ms) No 451 (dated 31.08.2020)ன் S.O.Pன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் ஆகும்.

————————————–


Share this page with friends