கீழ்ப்படிந்த மீன் !

Share this page with friends

“…ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” (ரோமர் 5:19)

அன்பு செல்லங்களே! இன்றைக்கு Bibleல் சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை கேட்க போகிறோம். நீங்க எல்லாரும் ரெடியா இருக்கிறீங்களா? ஒரு பெரிய மீன் எப்படி இயேசப்பாவுக்கு கீழ்ப்படிந்ததுன்னு கேட்கலாமா?

நினிவே என்ற பெரிய பட்டணம் இருந்தது. இங்கே வாழ்கின்ற ஜனங்கள் மிகவும் பாவம் செய்கின்றவர்களாய் இருந்தாங்க. தொடர்ந்து செய்கின்ற பாவம் தேவனுக்கு கோபத்தை கொண்டு வருமல்லவா? நீங்க கூட உங்க Parents -க்கு பிடிக்காத கெட்ட காரியங்களை செய்யும்போது கண்டிப்பாங்க, கீழ்ப்படியாத போது தண்டனை கொடுப்பாங்க தானே! அப்படித்தான் தேவன் உங்களை அழிக்கப்போகிறார் என்ற செய்தியை நினிவே பட்டணத்தாருக்கு சொல்ல யோனா என்ற தீர்க்கதரிசியை அனுப்பினார். ஆனால் யோனாவோ நினிவேக்கு போகாமல் தர்ஷீசுக்கு போனார். இப்பொழுதுள்ள கார், பைக், Aeroplane எல்லாம் கிடையாதில்லையா, வேறே எதுல போயிருப்பார். கப்பலில் போனார் Correct ஆ சொல்லிட்டீங்களே! அப்புறம் என்னாச்சு தெரியுமா?

கடலின் அலை பயங்கரமாய் கொந்தளித்து, பெருங்காற்று வீசத் தொடங்கியது. கப்பலில் பயணம் செய்த எல்லாரும் பயந்து போய் அவரவர் தெய்வங்களை நோக்கி வேண்டிக்கொண்டார்கள். பிரயோஜனம் ஒன்றுமில்லை, கப்பலில் இருந்த சரக்குகளையெல்லாம் கடலிலே தூக்கியெறிந்தார்கள். உயிர்மட்டும் பிழைத்தால் போதும் என்றிருந்தார்கள். எதினால் நமக்கு இவ்வளவு பெரிய ஆபத்து வந்தது என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். ஒரு முடிவுக்கு வந்து, நம் எல்லார் பெயரிலும் சீட்டுப் போட்டுப் பார்ப்போம் என்று சீட்டுப் போட்டார்கள். யோனாவின் பெயருக்கு அந்த சீட்டு விழுந்தது. யோனா தேவனுக்கு கீழ்ப்படியாமல் வந்ததையும், தான் யார் என்ற விவரத்தையும் சொன்னான். அது மட்டுமா? என்னை கடலிலே தூக்கிப் போடுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்றான். கப்பலில் பயணம் செய்த எல்லாருக்கும் வருத்தமாக இருந்தது. கப்பல் உடையத்தக்கதாய் கடலின் சீற்றம் அதிகமானதால், வேறு வழி தெரியாமல் யோனாவை தூக்கி கடலிலே போட்டார்கள். என்ன ஆச்சர்யம். கடல் அமைதியானது. எல்லாரும் ஆண்டவருக்கு பயந்து தேவனுடைய மகத்துவமான கிரியைகளை அறிந்து கொண்டார்கள். கடலிலே போட்ட யோனா என்ன ஆனார். யோனாவை விழுங்கும்படி பெரிய மீனுக்கு தேவன் கட்டளையிட்டார். மீன் அப்படியே கீழ்ப்படிந்தது. யோனாவை கடித்து சாப்பிடாமல் அப்படியே விழுங்கியது. மூன்று நாள் கழித்து, தேவன் மீனுக்கு கட்டளையிட்டார். மீனும் கீழ்ப்படிந்து யோனாவை கரையிலே கக்கிவிட்டது. தேவன் சொன்னபடியெல்லாம் அந்த மீன் செய்தது.

அன்பான தம்பி தங்கச்சி, சாதாரண மீன் கூட ஆண்டவர் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தது பார்த்தாயா? மூன்று நாள் எதுவும் சாப்பிட முடியாமல், விருப்பப்படி அங்குமிங்கும் செல்லமுடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் அந்த மீன். ஆனாலும் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்தை நிறைவேற்றின மீனை போல நீயும் கீழ்ப்படிந்து வாழ இயேசு உன்னை அழைக்கிறார். அர்ப்பணிப்பாயா? கீழ்ப்படிந்து தேவ சித்தத்தை நிறைவேற்றுவாயா?

ஆமென் அல்லேலூயா!.


Share this page with friends