பழைய ஏற்பாட்டின் திரளான சாட்சிகளில், சில சாட்சிகள் நமக்கு சுருக்கமாக ஆலோசனை சொல்ல வருகிறார்கள்

Share this page with friends

ஆனாலும், பொறுமையோடு!

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1)

பழைய ஏற்பாட்டின் திரளான சாட்சிகளில், சில சாட்சிகள் நமக்கு சுருக்கமாக ஆலோசனை சொல்ல வருகிறார்கள்….

வாக்குத்தத்தம் பெற்றபின்னும் காத்திருக்கும் நிலை வரும்! ஆனாலும் பொறுமையோடும் விசுவாசத்தோடும் இருங்கள்! பெற்றுக்கொள்வீர்கள்!
-ஆபிரகாம் – சாராள்!

அபிஷேகம் பெற்றபின்னும் ஆடுமேய்க்கும் நிலை இருக்கும்! ஆனாலும், தேவசித்தத்துக்காக காத்திருங்கள்! ராஜ மேன்மை வரும்!
– தாவீது ராஜா!

தரிசனம் பெற்றபின்னும் தள்ளப்படும் நிலைவரும்! ஆனாலும் தேவனோடு இருங்கள்! குறித்த காலத்தில் தரிசனம் நிறைவேறும்!
– யோசேப்பு!

பரிசுத்தமாய் வாழ்ந்தாலும், சோதனைகளுக்கும் இழப்புக்களுக்கும் பஞ்சம் இருக்காது! ஆனாலும் பொறுமையாய் இருங்கள்! அத்தனையும் மகிமையாய் மாறும்!
-யோபு!

தேவபிள்ளைகளுக்கும் பஞ்சம் வரும்! ஆனாலும் கர்த்தரை நம்பி உழைத்திடுங்கள்! பிழைக்கும்படி பலன் உண்டாகும்!
-ஈசாக்கு!

கைநிறைய இருந்தாலும், எதிரியால் உயிர்பயம் உண்டாகும்! ஆனாலும், கர்த்தரைச் சார்ந்திடுங்கள்! பகை மாறி சமாதானம் உண்டாகும்!
-(யாக்கோபு!) இஸ்ரவேல்!

உலக ஞானம், செல்வம் எல்லாம் மாயைதான்! என்ன ஆனாலும், தேவனைப் பிரியாதிருங்கள்! ஆவிக்குரிய ஞானமே முக்கியம்!
-சாலொமோன்!

தேவபிள்ளைகள் ஆனாலும் அக்கினியில் தள்ளப்படலாம்! ஆனாலும் வைராக்கியமாய் இருங்கள்! கர்த்தர் விடுவிப்பார்!
– அனனியா, அசரியா, மீஷாவேல்!

ஆலோசனைகளுக்கு நன்றியும்! சர்வவல்லவருக்கு துதியும் உண்டாவதாக! நாமோ, பொறுமையோடு ஓடக்கடவோம்! ஆமென்!
_____

But, Patiently…

Hebrews:12:1,2 – “Therefore we also, since we are surrounded by so great a cloud of witnesses, let us lay aside every weight, and the sin which so easily ensnares us, and let us run with endurance the race that is set before us, looking unto Jesus, the author and finisher of our faith…”

Amongst the numerous witnesses of the Old Testament, few of them are here to give some counseling….

There shall be a Circumstance where we need to wait even after receiving the Promise! But be Patient and Faithful! You will receive!
Abraham – Sarah!

There shall be a Circumstance of a Shepherd State even after receiving Anointing! But wait for God’s Will! A Royal Dignity is ahead!
– King David!

Even after receiving the Vision , there shall be a forsaken situation. But be sure you are with God! The Vision shall be fulfilled in Appointed time!
– Joseph!

There shall be Lacks and Losses even in a Holy Life ! But be Patient! Everything will turn out to Glory!
– Job!

There can be Famine in the life of God’s children! But Work Hard believing God! There shall be blessings for the Living!
– Isaac!

Despite the fact that you are rich, there shall be Life threatenings from the enemies! But rely upon God! Enemity shall be changed and there shall be Peace!
– Jacob (Israel)!

Wordly-wise and Richness are vanity! Whatever happens, do not leave the Lord! Spiritual Wisdom is important!
-Solomon!

Even if you are children of God you may be put into fire! But be Zealous! God will deliver!
– Hananiah, Azariah, Mishael!

Thanks for the Counseling! Praises to the Almighty! Let us run with Endurance! Amen!

GRACE INDIA MINISTRIES

மக்கள் அதிகம் வாசித்தவை:

லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.
ஓர்பாளின் ஒன்பது சகோதரர்கள்!வித்யா'வின் விண் பார்வை!
உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார் - முழுமையான விப...
கனத்திற்குரிய சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்களுக்கான சில ஆலோசனைகள்!
சிறப்பாக ஜெபிக்க நான்கு வழிகள்
மதியீனம்
இயேசு கிறிஸ்து நம்மை பாடுபட அழைத்திருக்கிறார்!
பனி மேகங்களுக்குள்ளே ஓர் வெள்ளை மாளிகை!வித்யா'வின் பார்வை!
ரூத்-எஸ்தர் புத்தகங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்.
கடவுள் இருப்பது உண்மையென்றால், ஒருவர் சிறுமியை கற்பழிக்கும் போது அதை ஏன் கடவுள் தடுத்து நிறுத்தவில்ல...

Share this page with friends