ஒரு நிமிட ஜெபம்

ஒரு நிமிட ஜெபம்
ஆண்டவரே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கொந்தளித்துக்கொண்டிக்கிற குடும்பத்தில் நல்ல சமாதானத்திற்கேதுவான சூழ்நிலையை தாரும் இயேசுவே..ஆமென்..
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.. சங்கீதம் 107: 29,30.
கடலில் கொந்தளிப்பு வரும்போது அதிகமான காற்று அதாவது புயல் காற்று வீசும்..கடலின் அலைகள் அதிகமாக காணப்படும்.கடலில் கொந்தளிப்பு அதிக சேதங்களை உண்டாக்கிதான் செல்லும்..
இந்நாட்களில் கொந்தளிப்பு போல கொள்ளை நோய் எல்லாரையும் கண் கலங்கி நிற்கச்செய்கிறது..உங்கள் வாழ்க்கையில் இருந்த கொந்தளிப்பை ஆண்டவர் அமர்த்துகிறார்..உங்கள் புயல்காற்றை பூந்தென்றலாக மாற்றுவார்.
மாறி மாறி அலைகள் போல பலவிதங்களில் நீங்கள் சோதனைகளை சந்தித்துக்கொண்டிருக்கலாம்..அலைகள் ஒய்ந்துவிடும்..சோதனைகளை ஆண்டவர் அடக்குகிறார்..கலங்காதீங்க..உங்கள் கண்ணீரை ஆண்டவர் காண்கிறார்..
உங்கள் வாழ்க்கையில் அமைதியையும் சமாதானத்தையும் காண்பீர்கள்.. உங்கள் குடும்பத்தில் உண்டான கொந்தளிப்பு மாறும்.தவிப்பின் காரியத்தை ஆண்டவர் மாற்றுவார்…அமைதலான நிலையை ஆண்டவர் உருவாக்குவார்..நிச்சயம் சந்தோஷத்தை காண்பீர்கள்.. ஆண்டவரை மாத்திரம் உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள்..
ஜெபம்:
ஆண்டவரே, என் வாழ்வில் இருக்கிற கொந்தளிப்பு நிலையை மாற்றும்..பாதிப்பின் நிமித்தமாக இருக்கிற எல்லா அலைகளின் சூழ்நிலையை கண்ணோக்கி பாரும்..சமாதானத்துக்கேதுவான பாதையில் நடத்தும்..என் வாழ்வில் சந்தோஷத்தை தாரும்..உம்முடைய பலத்த கிரியைகளினிமித்தம் என்னை சந்தோஷப்படும் இயேசுவே.. ஆமென்..
Pr.Mrs.Kirubai Anthony.
ECI CHURCH… Arumuganeri.