யூத ரபிகளின் பாரம்பரிய கதை ஒன்று இப்படியாக இருக்கிறது. இதில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது

Share this page with friends

ஜலபிரளயம் வருவதற்கு முன்பு நோவா எல்லா மிருகங்களையும் அழைத்தபோது எல்லாம் சீக்கிரமாக வந்து பேழைக்குள் பிரவேசித்தது.

எல்லாம் சரியாக ஜோடியாக வந்துவிட்டதா என்று சரி பார்த்து கொண்டிருந்த போது “சாத்தான் பேழைக்குள் ஒரு மூளையில் உட்கார்ந்து இருப்பதை நோவா பார்த்து நீ எப்படி இங்கு உள்ளே வந்தாய் என்று ஆச்சரியமாய் கேட்டபோது.

எல்லா மிருகங்களும் சீக்கிரமாக வந்து கொண்டிருந்த போது கழுதைமட்டும் மெதுவாக வந்து கொண்டிருந்ததை பார்த்து ஏய் சாத்தானே சீக்கிரமாய் நடந்து வா என்று நீங்கள் கூறின அந்த நிமிடம் நான் பேழைக்குள் வந்துவிட்டேன் என்று கூறினதாம். இங்கே கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் என்ன?

…..இது போல தான் சத்தான் தெருவில் அவன் வேலை பார்த்துகிட்டு இந்த சபைக்கும், விசுவாசிக்கும், சம்பந்தம் மில்லையென்று அவன் அமைதியாக போகும் போது.

நம்ம ஆளுங்க சில பேர்……. அப்ப தான் “இயேசு நாமத்தில் சாத்தானே உன் கட்டுகிறேன், குத்துகிறேன், அக்கினியை இறக்குகிறேன்… என்று சம்பந்தமில்லாமல், சத்தம் போட்டவுடனே யாரோ நம்மள கூப்பிடுராண்டா என்னதான் நடக்குதுன்னு போய் பார்போம்ன்னு சொல்லி “அப்பதான் சாத்தான் உள்ளளேயே” வரான்.

நாம் தேவையில்லாமல் சாத்தனை கட்டி அவனை உள்ள வைக்காகூடாது. அவனை கட்டவும் முடியாது கடிந்துக்கொள்ள மட்டும்தான் முடியும்.

ஆகவே சாத்தானிடம் அதிகம் போராடுவதைவிட, பேசுவதை விட தேவனிடம் அதிகம் பேசுங்கள் ஜெயம் உங்களுக்கு. வாசித்த அனைவருக்கும் நன்றிகள்

Pr. N. Santhosh kumar
Thirukoviur.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends