கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு

Share this page with friends

கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு

கிறிஸ்துவில் பிரியமானவர்களே. கிறிஸ்தவ வாட்சாப் குழுக்கள் வழியாக மிக பெரிய மோசடி நடந்து வருகிறது. மிக கவனமுடன் இருந்த செய்தியை வாசியுங்கள்.

அயல் நாட்டு தொலைபேசி எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலோ, குறுங்செய்தி கிடைத்தாலோ, அல்லது வாட்சாப் குழுக்களில் இணைந்தாலோ கவனமுடன் இருங்கள்.

தன்னை Rev, Sister, Father, Bishop என அடையாளப்படுத்தி முதலில் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். அதை தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்பார்கள். பின்னர் எங்களது நேரலை ஜெப கூடுகையில் கலந்து கொள்ளுஙகள் என கூறி உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் உண்மையில் அது நேரலை ஜெபம் அல்ல. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு ஜெபத்தை நேரலையில் ஔிபரப்பி உங்களை பரவசப்படுத்துவார்கள்.

அடுத்து உங்கள் தனிப்பட்ட WhatsApp எண்ணிற்கு வசனங்கள் அனுப்புவார்கள். ஒரு சில நாட்களில் உங்களுக்கு வெகுமதி அனுப்புகிறேன் என்பார்கள். தேவன் தான் இதை செய்ய சொன்னார் என்று உரக்க கூறுவார்கள்.

தெளிவான முகவரி அனுப்ப சொல்வார்கள். நீங்கள் முகவரி அனுப்பிய உடன் உங்கள் முகவரி ஸ்டிக்கர் ஒட்டியபடி பார்சல் ஆயத்தம் செய்து, நாம் நம்பும் படி புகைப்படங்கள் அனுப்புவார்கள்.

வெகுமதி பெட்டியில் வேதாகமங்கள், தங்க நகைகள், ஐ போன், ஐ பேடு, ஜெப கையேடுகள், வாட்ச், சாக்லேட் பெட்டி, ஜெப எண்ணைய், 5 டிசர்ட் மற்றும் 70 ஆயிரம் பவுண்ட் அல்லது செக், டாலர் இவைகளை ஒரே பெட்டிக்குள் வைத்து பாதுகாப்புடன் கூரியர் மூலம் அனுப்புகிறோம் என கூறி கூரியர் பில்லையும் நகலெடுத்து அனுப்புவார்கள்.

(Bible, gold necklace, iPhone 12, ipad, apple laptop, praying books, 5 t-shirt, wrist watches, anointing oil, facemask, chocolate box And brown envelope with 70,000 pounds cheque.or doller)

ஒரு சில நாட்களுக்கு பின்னர் டெல்லி கூரியர் அலுவுலகத்திலிருந்து அழைப்பார்கள். Custom office என்பார்கள். உங்களுக்கு கூரியர் பார்சல் வந்துள்ளது அதற்கு நீங்கள் 25,000 ரூபாய் ஆன்லைன் மூலம் அனுப்பி வையுங்கள் என்பார்கள். உடனே நாமும் அது உண்மை என நம்பி அனுப்பிவிடுவோம். அத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்துவிடும்.

அதன்பின் தலைகீழாக நின்று யாரை தொடர்பு கொண்டாலும் தொடர்பு கிடைக்காது. சமீபகாலத்தில் கிறிஸ்தவர்களை மட்டும் குறிவைத்து இத்தகைய பண மோசடி நடக்கிறது.

உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன், அல்லது வாங்கள் சேர்ந்து ஜெபிப்போம், எங்கள் நிகழ்ச்சிகளை பாருங்கள் என விரிக்கும் வஞ்சக வலையில் சிக்கி உங்கள் பணத்தை இழந்துவிடாதிருங்கள்.

உங்களுக்காக கருத்துடன் ஜெபிக்க, எந்நேரமும் ஜெபிக்க மிக சரியான நபர் உங்கள் சபை போதகர் மட்டுமே. ஆன்லைனில் கண்ணில் படும் எண்ணிற்கெல்லாம் அழைத்து உங்களை நீங்களே ஏமாற்றிவிடாதிருங்கள்.

இத்தகைய ஆன்லைன் மோசடிகளிலிருந்து தேவன் நம்மை விலக்கி காப்பாராக. இந்த செய்தியை எவ்வளவு பேருக்கு பகிர்ந்து கொள்ள முடியுமோ அத்தனை பேருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களால் யாரேனும் ஒருவராவது மீட்கப்படட்டும்.



Share this page with friends