போதகர் பெவிஸ்டன் அவர்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு

பரமன்குறிச்சியிலுள்ள சீயோன்நகரை சேர்ந்த போதகருக்கு அமெரிக்காவை சேர்ந்த பல்கலைகழகம் பாராட்டு:
பரமன்குறிச்சி சீயோன்நகரிலுள்ள பூரண கிருபை ஏ.ஜி சபையை சேர்ந்த உதவி போதகர் பெவிஸ்டன் அவர்கள் இலக்கியம் மற்றும் ஊடக சேவையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வருகிறார். இவரது இந்த சேவையினை அங்கிகரித்து அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநகரில் அமைந்துள்ள டேஸ்பிரிங் தியாலஜிகல் யுனிவர்சிட்டி பாராட்டியுள்ளது.

பாஸ்டர்.பெவிஸ்டன் அவர்கள் தமிழ் நாளேடுகள், பத்திரிகைகள், பருவ இதழ்களில் தொடர்ந்து கிறிஸ்தவ இலக்கியம் சார்ந்து கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். மேலும் இலக்கியம் சார்ந்து பணியாற்றும் பலரை ஊக்கப்படுத்தி சமூகத்தில் முன்னேற வழிவகை செய்து வருகிறார். சமூக ஊடகங்களில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் இவரது ஊடகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவரது இலக்கியம் மற்றும் ஊடக சேவையினை அங்கிகரித்து அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநகரில் அமைந்துள்ள டேஸ்பிரிங் தியாலஜிகல் யுனிவர்சிட்டி பாராட்டியுள்ளது.
நேற்று (திங்கள்கிழமை) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை திருநெல்வெலி பெருமாள்புரத்தில் அமைந்துள்ள மோர்கன் ஹாலில் நடைபெற்ற ஐ.பி.டி.ஐ-யின் பட்டமளிப்பு விழாவில் (12 அக்டோபர் 2020) பல்கலைகழகம் வழங்கியுள்ள பாராட்டு சான்றிதலை யுனிவர்சிட்டி சேர்மன் டாக்டர்.டேனியல் கார்த்திகேயன் மற்றும் ஐ.பி.டி.ஐ-யின் தலைமை பேராயர்.ஜென்ட்லி ஜான்சன் ஆகியோர் வழங்கினர். அதனை தொடந்து 40க்கும் மேற்பட்ட இறையியல் பயின்ற மாணவர்கள் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்கள் பெற்றனர்.
சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற இவ்விழாவில் பல போதகர்கள், விசுவாசிகள் பங்குபெற்றனர்.