உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார் – முழுமையான விபரம்

Share this page with friends

உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். தேவ மனிதனுக்கு சல்யூட்

உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ அவர்கள் இன்று 14.09.2021 அன்று காலை  கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். அவரது மறைவு உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்களிடையே மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவரை குறித்த அற்புதமான தகவல்களை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

உலகத்தில் அதிக விசுவாசிகளை உடைய சபை தென் கொரியாவின் சீயோல் பட்டணத்தில் உள்ளது. சுமார் 15 லட்சம் விசுவாசிகள் அங்கம் வகிக்கும் அந்த சபையின் ஸ்தாபகர் போதகர் பால் யாங்கி சோ என்பவராவார். பின்னர் டேவிட் யாங்கி சோ எனவும் அழைக்கப்பட்டார். இவர் நல்ல ஒரு விசுவாச வீரர்.

புத்த மதத்தை சேர்ந்த இவர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டதினால் இவரை வீட்டை விட்டு விரட்டியடித்தனர். தன்னுடைய குடும்பத்தினர் வெறுத்தாலும் இவர் தன்னுடைய குடும்பம் இரட்சிக்கப்படும் என்ற விசுவாசத்துடன் (அப் 16:31) வசனத்தை உறுதியுடன் பிடித்து ஜெபம் பண்ணி கொண்டிருந்தார்.

இரட்சிக்கப்பட்டதின் விளைவாக வீட்டை விட்டு இவரை துரத்தியதால் இவர் தன் தகப்பனாருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார், ஆனால் பதில் கடிதம் வராது. இதனால் இவர் அநேகம் முறை சோர்வுற்றாலும் இடைவிடாமல் இந்த வசனத்தை பிடித்து ஜெபித்து கொண்டே இருந்தார்.

2 வருடம் சென்ற பின், அவருடைய தகப்பனார் தொழிலில் நஷ்டம் அடைந்ததை கேள்விப்பட்டு அவரை சந்திக்க செல்கிறார் பால் யாங்கி சோ. அவரது அப்பா இவரை பார்த்த போது நீ தான் இந்த தோல்விகளுக்கு எல்லாம் காரணம், நீ கிறிஸ்துவன் ஆனதினால் புத்தருடைய ஆவியும், நம் முற்பிதாக்களின் ஆவியும் என் மேல் கோபமாக இருக்கிறார்கள் அதனால் நான் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என்னுடைய நஷ்டத்திற்கு நீ தான் காரணம் என சொல்லி இவரை திட்டுகிறார்.

பால் யாங்கி சோ வேதாகம கல்லூரியில் படித்து கொண்டிந்த தன் நண்பர்களின் உதவியால் தன்னுடைய அப்பாவின் தயாரிப்புகளை விற்கும் படியாக செய்கிறார். அப்பா நீங்கள் ஒரே ஒரு முறை எங்கள் ஆலய
ஆராதனைக்கு வந்து கலந்து கொள்ளுங்கள். அப்பொழுது என் நண்பர்கள் உங்களுக்கு தொடர்ந்து உங்கள் தயாரிப்புகளை விற்கும் படியாக உதவுவார்கள் என சொல்ல, அவரது தகப்பனாரும் சரி.. நமது தயாரிப்புகளை அவர்கள் விற்கிறார்களே என சொல்லி அவரும் ஆலய ஆராதனைக்கு வர சம்மதிக்கிறார்.

சோ வுக்கு ஒரே மகிழ்ச்சி, அப்பாவை கூட்டிக்கொண்டு ஆலயத்துக்கு செல்கிறார். அன்று அமெரிக்க மிஷனெரி ஒருவர் பிரசங்கம் செய்கிறார். அதை கொரிய மொழிய மொழி பெயர்ப்பவர் நம்ம சோ. வந்தவருக்கு கொரிய பாஷை தெரியாது. அவர் பிரசங்கம் பண்ண பண்ண, நம்ம சோ உள்ளத்தில் ஆண்டவரை நோக்கி கதறி ! ஆண்டவரே, என்னுடைய தகப்பனாருக்கு கிடைத்த இந்நாளில் இவரை இரட்சியும் என மன்றாடிக்கொண்டே இவர் அவருக்காகவே வேறு ஒரு பிரசங்கம் பண்ணுகிறார்.

ஒரே நேரத்தில் 2 பிரசங்கம் ஓடுது.. மிஷனெரி ஒரு பிரசங்கம் பண்ணுகிறார். சோ தன்னுடைய தகப்பன் இரட்சிக்கப்படனும் என்ற ஏக்கத்துடன் இவர் வேறு ஒரு பிரசங்கம் பண்ணுகிறார். திடிரென தலை குனிந்த கொண்டிருந்த அவரது தகப்பனார் தலை நிமிர்ந்து பிரசங்கத்தை உற்று கவனிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவருடைய இருதயம் உடைந்தது. அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது..

இதனை சோ மேடையிலிருந்து கவனிக்கிறார். இவருக்கு ஒரு டவுட் அவர் மனம் திரும்பி அழுகின்றாரா? அல்லது தொழில் நஷ்டத்தினால் தன் வறுமையை எண்ணி அழுகிறாரா? என புரியாமல் முழிக்கிறார்.

கூட்டம் முடிகிறது.. அப்பாவை நோக்கி வருகிறார் சோ.. அவர் முகத்தில் ஒரு பிரகாசத்தை பார்த்து விட்டு நீங்கள் கிறிஸ்துவின் பிள்ளை ஆகிவிட்டீர்கள். ஆண்டவர் உங்களை தொட்டு விட்டார்
என சொல்லும் போது, அதற்கு அவரது அப்பா..

“மகனே நான் ஆலயத்துக்கு வருமுன்னே உன்னை பரிகாசமும் கிண்டலும் பண்ணி கொண்டிருந்தேன். இங்கே நான் உட்கார்ந்திருந்த போது திடீரென்று என் கண்கள் கூசியது. அப்பொழுது இயேசு தோன்றி என்னை பெயர் சொல்லி அழைத்து, எவ்வளவு காலம் என்னை எதிர்த்து நிற்க போகிறாய்? என்றார்! உடனே அவர் தான் ஜீவனுள்ள தேவன் என்பதை அறிந்து என்
பாவத்தையெல்லாம் அறிக்கையிட்டு மன்னிக்கும் படி வேண்டினேன். அப்பொழுது தேவ சமாதானமும், சந்தோசமும், நம்பிக்கையும், என்னில் வந்தது. இப்பொழுது நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்ல சோ வுக்கு ஒரே மகிழ்ச்சி!

தேவனுக்கு நன்றி செலுத்தி விட்டு தன் தகப்பன் மன மாற்றத்திற்காக தேவனை துதிக்கிறார். அதுவரை தகப்பனை கண்டு பயந்த சோ.. அவருடைய மன மாற்றத்ததை கண்டு மகிழ்கிறார்.. அல்லேலூயா !!!

நான் நாளைக்கே நமது கிராமத்திற்கு போய் எனக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவை சொல்லப் போகிறேன் என புறப்பட்டு கிராமத்துக்கு செல்கிறார். இவர் வெறுங்கையோடு வந்ததினால் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தினால் தன்னை அடிப்பாரோ என அவரது மனைவி பயத்துடன் காணப்பட்டதை பார்த்த இவருக்கு தன்னிலே வெட்கமாக இருந்தது. அடுத்த நாள் கால வேளையிலே இவர் முழங்கால் படியிட்டு தன் குடும்பத்து ஜனங்களுக்கு முன்பாக “தேவனே !!! என்னுடைய மனைவியை கொடுமை படுத்தின காரியத்தை மன்னியும் !!! நீர் என் இருதயத்தில் வந்து விட்ட படியினால் என் குடும்பத்து மக்களிடையே பயமுறுத்தி ஆளுகை செய்யாமல் அன்போடு நடந்து கொள்ள உதவி செய்யும் என ஜெபிக்க…,

இவரது மனைவியும் இவரது மனமாற்றத்தை கண்டு நானும் இந்த அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளவே விரும்புகிறேன் என மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.

இதைக்கண்ட சோ வின் சகோதரிகள் நாங்களும் இயேசுவை அறிய வேண்டும் என சொல்லி சோ விற்கும் தந்தி கொடுத்து வரவழைக்கிறார்கள். எந்த வீட்டில் துரத்தினார்களோ அதே வீடு சோ வை இப்பொழுது வரவேற்கிறது.. அல்லேலூயா !!!!

அளவில்லா மகிழ்ச்சியோடு சொந்த வீட்டிற்கு திரும்பி வருகிறார். உற்சாகமாக இயேசுவை பற்றி சொல்கிறார்! அந்நாளில் 11 பேர் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். அல்லேலூயா !!

ஒ !! எவ்வளவு அற்புத சாட்சி! என் உள்ளத்தை தொட்ட சாட்சி இது !! குடும்பத்தில் ஒருவர் இரட்சிக்கப்பட்டிருந்தாலே அந்த இரட்சிக்கப்பட்ட நபர் தேவனை விசுவாசிக்கிறதினிமித்தம் அவர்களுடைய முழு வீட்டாரையும் இரட்சிக்க நம் தேவன் வல்லவரே!!! நீங்களும் கூட என் குடும்பத்தில் நான் மட்டுமே இரட்சிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பமும் இரட்சிக்கப்பட வேண்டும் என ஜெபிக்கிறீர்களா? உங்களுடைய விசுவாச ஜெபத்தை கேட்டு உங்களுடைய முழுக்குடும்பத்தையும் இரட்சிக்க இயேசு வல்லவராயிருக்கிறார். சோர்ந்து போகாதீர்கள்.

தனி ஒரு மனிதனாக இரட்சிக்கப்பட்டவர் தனது விசுவாச ஜெபத்தினால் முழு குடும்பத்தையும் ஆதாயப்படுத்தினார். பின்னர் முழு கொரிய தேசத்தையும் எனக்கு தாரும் என ஜெபிக்க ஆரம்பித்தார். தினமும் 6 முதல் 8 மணி நேரம் ஜெபிக்க தீர்மானித்து ஜெபித்தார். விளைவு என்ன? உண்மையை சொல்லப்போனால் முழு தேசத்தையுமே தேவன் அவருக்கு சொந்தமாக கொடுத்தார்.

18 லட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகளை கொண்ட மிகப்பெரிய ஆலயத்தை உருவாக்கினார். ஆலயத்தில் இருக்க இடமில்லை என சொல்லக்கூடிய அளவிற்கு சபை பெருகியது. மாபெரும் எழுப்புதல் கொரியாவில் வெடித்து உலகமெங்கும் பரவியது. நமது இந்தியாவிலிருந்தும் சகோ. சாம் ஜெபத்துரை, சகோ. டி.ஜி.எஸ் தினகரன், சகோ. மோகன் சி லாசரஸ், போதகர். டி. மோகன் ஆகியோரும் அந்நாட்களில் நேரில் சென்று எழுப்புதலை கண்டு வந்தனர்.

பிரட்சனைகளை வெல்லுங்கள், ஜெப ஐீவியம், நான்காவது பரிணாமம், இயேசுவோடு இணைந்த ஜெபம், வெற்றியுள்ள வீட்டு ஜெபக்குழுக்கள் என்னும் இவரது நூல்கள் மிக பிரபலமானவை. இந்த நூல்கள் அனைத்தும் தமிழ் மொழி உட்பட பல மொழிகளில் வெளிவந்து இலட்சகணக்காணோர் வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் இவரை தெரியாத கிறிஸ்தவரே இல்லை என சொல்லும் அளவிற்கு தேவன் இவரை பயன்படுத்தினார். உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்து ஊழியம் செய்தவர் என குறிப்பிடத்தக்கது. அசெம்பிளிஸ் ஆப் காட் என்னும் பேரியக்கம் இந்தியாவில் நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியாவிற்கு அவர் வருகை தந்து, சென்னையில் தனது முதிர்வயதில் ஊழியத்தை நிறைவேற்றினார்.

இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம். அவரது வாழ்விற்காக தேவனை துதிப்போம்.

பால் யாங்கி சோ எப்படி இரட்சிக்கப்பட்டார் என ஆர்வம் உள்ளவர்கள் இந்த வீடியோவை காணுங்கள். ஆச்சரியமான பல சம்பவங்கள் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Rev. Dr. Paul Yongi Chi, Pastor of the largest church in the world, has impacted millions of believers and Pastors around the globe, authored several books, has raised and mentored many leaders, a great hero of faith went home to be with the Lord this morning. He has left a great legeacy.

Rev. Dr. Paul Yongi Cho, Founder of Yoido Full Gospel Church (South Korea) has gone to be with the Lord this morning (1936-2021). The Lord had mightily used Him to bring a great Revival in Korea. He had established the world’s largest church and authored many books. His preachings with the power of the Holy spirit and his healing ministry has touched millions around the world. We convey our deepest condolences to the bereaved family and church members

மக்கள் அதிகம் வாசித்தவை:

1964-ம் ஆண்டு புயலின் நினைவு சின்னமாக விளங்கும் தனுஷ்கோடி கிறிஸ்தவ ஆலய சுவர் இடிந்து விழுந்தது
எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது?
விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே - சிறுகதை
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் என்ன?
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பண...
கர்த்தர் அருளிய ஆறு வாக்குத்தத்தங்கள்
கோதுமை மணியின் தியாகம்
சூறையாட நினைக்கும் வஞ்சக மேய்ப்பர்களின் கதி என்ன?
நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு
How should Christians approach the poor?

Share this page with friends