பாஸ்டர் பால் தங்கையா அவர்கள்

Share this page with friends

பெங்களூருவில் உள்ள பூரண சுவிசேஷ தேவசங்க திருச்சபையின் தலைமை போதகரும் பல திருச்சபைகள் உருவாக காரணமாக இருந்தவருமாகிய பாஸ்டர் பால் தங்கையா அவர்கள் நேற்று  காலை 9.30 மணிக்கு நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் தேவச்செய்தியளித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு நிலை தடுமாறினார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை செய்து வருகின்றனர். போதகரின் உடல் நலம் குறித்து பாஸ்டர். சாமி தங்கையா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போதகர் தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவ அறிக்கைகளும் சீராக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

போதகர் விரைவில் பூரண சுகம் பெற்று வீடு திரும்ப உலகம் முழுவதும் ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டு வருகிறது. நாமும் போதகருக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்வோம்.


Share this page with friends