லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.

Share this page with friends

24-5-2020 அன்று பதிவு செய்யப்பட்ட போதகற்களுக்கான ஒரு பதிவு. லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.

  1. நீங்கள் நீங்களாகவே இருங்கள். Online message கொடுத்து பழகின நீங்கள் மாற்றம் என்றும் style என்றும் ஏதும் ஏடாகூடமாக செய்து விடாதீர்கள். உங்களை பல வருடங்களாக விசுவாசிகள் சபையில் நேரடியாக சந்தித்து இருக்கிறார்கள் என்பதை நினைவு கூறுங்கள். அவர்களை சிரித்த முகத்துடன் வாழ்த்துங்கள். நிறைவுடன் சந்தோசமாக வரவேற்று கொள்ளுங்கள்.
  2. உணர்ச்சி வசப்படாதிருங்கள். உங்களுக்கு சில ஏமாற்றங்கள் காத்திருக்கலாம். நீங்கள் எதிர்பார்க்கும் நபர் வாரமல் கூட போகலாம். இதில் உங்கள் மந்தையை நீங்கள் அடையாளம் காண்பீர்கள். எதையும் ஏற்று கொள்ளவும் எச் சூழலையும் மன நிலைகளையும் சந்திக்கவும் தயாராக இருங்கள். லாக் டோன் தந்த negative உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம். விசுவாச உணர்வுகளை ஏற்படுத்துங்கள்.
  3. நன்றி உணர்வோடு ஸ்தோத்திரம் துதிகளில் உற்சாக பலிகளை எரெடுங்கள். எதிர்மறையான சூழல்கள் இருப்பினும் நிச்சயம் கர்த்தர் செய்த நன்மைகளை கண்டு அவர் வல்லமையை தரித்து ஆராதிக்க தூண்டுங்கள். கிருபை பனியை போல இறங்கும். வீடுகளில் எனோ தானோ என்று இருந்து கொண்டு ஆராதித்து இருக்கலாம். பயத்தோடு, பரிசுத்த, பயபக்தியுடன் ஆராத்திக்க வேண்டிய உண்மையை புலப்படுத் துங்கள்.
  4. அதற்கு முன்னே செய்ய வேண்டிய ஒழுங்குகளை சரியாக செய்யுங்கள். சோஷியல் distancing in the church. பாதுகாப்பான காணிக்கை சேகரித்தல், கை கழுவுதல் இயேசு களுகவில்லை எங்களுக்கு எதற்கு என்று வீண் வாதம் வைக்காமல் அதற்குரிய ஒழுங்குகளை செய்யுங்கள். விசுவாசிகள் ஜெபிக்க வேண்டும் என்றால் எப்படி செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே ஒழுங்கு செய்யுங்கள். ஓர் சிறிய காரியத்திலேயும் ஒழுங்கு தேவை. எப்படியும் அதிகாரிகளின் மோப்பம் சில வாரங்களாகவே தொடரும். காரியங்களை ஒழுங்கு படுத்த உண்மை யுள்ளவர்களை ஏற்படுத்துங்கள். சட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
  5. குடும்பத்தின் முக்கியத்துவம் போல சபையின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள். பல செய்திகளை கேட்டு வந்தவர்கள் உங்கள் ஆராதனையை செய்திகளை குறை காணும் நோக்கோடு வரலாம் ஆனாலும் சபை கர்த்தரின் ஒழுங்கு அதை ஏற்படுத்தின நோக்கம் சபை ஊழியர்களின் மகத்தாய பங்கு போன்றவைகளை சொல்வதற்கு சரியான இந்த தருணத்தை பயன்படுத்துங்கள். சிலவேளை நீங்கள் இதுவரை மாதத்தில் ஒரு செய்தி மட்டும் கொடுத்து விட்டு மற்ற வாரங்களில் விர்ந்தினர்களை நம்பி இருந்து இருக்கலாம் ஆனால் இனி வரும் நாட்களில் மந்தையை குறித்து நன்றாக அறிந்து அவர்களை சபையின் அங்கமாக கருதி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கர்த்தரின் வார்த்தைக்கு காத்திருந்து பெற்று கொடுங்கள்.
  6. பாடுகள் ஊடாக தான் தேவ ராஜ்யம் செல்ல வேண்டும் என்கிற சத்தியத்தின் அடிப்படையில் உபதேசங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். பாடு பட ஆயத்தமாக இருக்க வேண்டும, சீசத்துவம், மற்றும் சுவிசேஷம் அறிவித்தல், அவர் வருகைக்கு ஆயத்தம் போன்ற அடிப்படை சதியங்கலுக்கு நேராக கவனத்தை திருப்புங்கள். இப்பொழுது நடந்த நடக்கின்ற சூழல்களை ஒப்பிட்டு காட்டி கொடுங்கள். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி சுவிசேஷ அறிவிப்பின் மேன்மை, சீசத்துவதின் மேன்மை, அவரை சந்திக்க ஆயதமாகுதலின் மேன்மை, மிஷனரிகள் அனுப்ப வேண்டியதின் முக்கியத்துவம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்ள்.
  7. கொஞ்சம் நாட்களுக்கு சபை தரிசனம் வளர்ச்சி திட்டங்கள் என்று எதையும் தினிக்காதிருங்கள். ஏனெனில் மக்கள் பொருளாதாரத்தில் சரியாகவும் சூழல்கள் சரியாகவும் சில வருடங்கள் கூட ஆகலாம். விசேஷ கூட்டங்கள் விசேஷ பிரங்கியார் என்று ஏதும் திட்டம் போடதிருங்கள். தவிர்க்க முடியாத சூழல் வந்தால் நன்றாக நிதானித்து செயல் படவும். நீங்களே சபைக்கு விருந்தாக மாறுங்கள். விசுவாசிகளின் மத்தியில் அன்பின் உறவில் மேம்படுங்கள். எனவே ஜெபம் ஆராதனை, சத்திய வசனங்களை அறிவித்தல், பக்திவிருத்தி போன்ற முக்கியமான காரியங்களை விசுவாசத்தின் அடிப்படையிலும் அன்பின் அடிப்படையிலும் முன்னிறுத்தி விசுவாசிகளை விசாரித்து சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுங்கள்.

கர்த்தர் உங்களோடு இருப்பார். இன்னும் அறிவை உணர்த்துவார். உங்கள் சபை வளரும். அற்புத அடாயலங்கள் நடக்கும். மார நாதா சீக்கிரம் வாரும்!

செலின்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends