விதிமுறைகளை மீறினால் ஆலயத்திற்கு 10 ஆயிரம் அபராதம். இந்த செய்தி உண்மையானதா?

Share this page with friends

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஞாயிறு அன்று அரசு அதிகாரிகள் ஆலயத்துக்கு வந்து பார்வையிட வரும் போது ஆலயத்துக்குள் மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 200 என்றும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் இருந்தால் ரூபாய் 500 என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் ரூபாய் 1000 என்றும் இது போக அந்த ஆலயத்திற்கு ரூபாய் 10,000 வரை அபராதம் வசூல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆகவே போதகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஒரு செய்தியானது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வந்தது.

வைரலாக பரவிய வதந்தி

இந்த செய்தியானது நூற்றுக்கு நூறு சதவீதம் தவறானது. இதுகுறித்து மாநில அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பின் மாநில துணைதலைவர் பாஸ்டர். அருள் சாலமோன் அவர்கள் சென்னை மாநகராட்சியின் கார்ப்ரேஷன் இன்ஸ்பெக்டரை தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்தபோது இன்ஸ்பெக்டர் அவர்களும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என்பதை உறுதி செய்துள்ளார்.

ஆலயத்திற்கு அபராதம் இல்லை அப்படியானால் நாம் விதிமுறைகளை மீறலாமா? இல்லை, அரசு விதிமுறைகளை பின்பற்றுவது திருச்சபையின் கடமை. இது வேத ஒழுங்கும் கூட. ஆயினும் விதிமுறைகளை மீறும்பட்சத்தில் நிரூபிக்கப்பட்டால் அல்லது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டத்தின்படி அது விதிமீறல் குற்றம். ஆகவே தக்க நடவடிக்கை கடுமையாகவே மேற்கொள்ளப்படும். ஆகவே நாம் இந்த காலங்களில் நம்மையும் நம் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் திருச்சபை மூலம் ஒருவருக்கு தொற்று பரவினால் முழு சபையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

அன்பானவர்களே உண்மைக்குப் புறம்பான வதந்திகளை உண்மை என்று எண்ணி உடனே உங்கள் நண்பர்களுக்கு பகிர வேண்டாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மக்களிடையே தேவையற்ற மனசலனத்தை உருவாக்க கூடும். ஆகவே உண்மை தன்மையை தீர ஆராய்ந்து செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த செய்தியை நீங்கள் வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மதவழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை அறிய விரும்புவோர் கீழ்காணும் லிங்கை பயன்படுத்திக்கொள்ளவும்

மக்கள் அதிகம் வாசித்தவை:

விசுவாசிகள் covid 19 தடுப்பூசி போடலாமா? தடுப்பு மருந்து எடுப்பதில்
காப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது
பார்வையற்ற போதகருக்கு நீதி கிடைக்குமா?
கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை
மதம் இல்லை, மனிதம் மட்டும் தான்: 600 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமிய கட்சிகள்!
10 priests died in the last 24 hours in India
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்கு கிறிஸ்தவ தலைவர்கள் வாழ்த்து
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்
கிறிஸ்தவ நலவாரியம் அமைப்பது குறித்து தமிழ் நாடு அரசு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருடன் கிறிஸ்தவ தலைவ...
மதவழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை

Share this page with friends