பெந்தேகொஸ்தே ஞாயிறு

Share this page with friends

பெந்தேகொஸ்தே ஞாயிறு

பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி அருளப்பட்ட நேரம் காலை 9 மணி (அப் 2: 1-4,15)

தேவன் இஸ்ரவேல் தேசத்திற்க்கு அடுத்து இந்தியாவை எழுப்ப சித்தம் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டில் தமிழனுக்கு/ தமிழச்சிக்கு அருளிய பரிசு.. அதேபோல…
மேல் வீட்டறை பெந்தேகொஸ்தே முதல் எழுப்புதல் எருசலேமில். இரண்டாம் எழுப்புதல் (யோவேல் 2: 28) இந்தியா – தமிழ்நாட்டில். இவை தேவ சித்தம். ஆவியிலே எழுப்பப்பட்டு இருதயத்தில் சந்தோஷம் அடைந்தவர்கள் 120 பேர் அன்று பத்து நாட்கள் மேல்வீட்டறையில் காத்திருந்தார்கள், இயேசு கிறிஸ்து அருளிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு. (அழைக்கப்பட்டவர்களோ 500க்கு மேல்)


*அக்கினி ஞானஸ்நானம்*

மத்தேயு 4: 7- 12 ல்
மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

பரிசுத்த ஆவி என்பது அபிஷேகத்தின் மூலம் ஞானஸ்நானம். இந்த அபிஷேகம் மனந்திரும்பலை அருளும். மன அழுக்கு நீக்கப்படும். அக்கினி நியாயாயத்தீர்ப்பையும் குறிக்கலாம்.

பெந்தேகொஸ்தே நாளன்று அப்போஸ்தலர்களும் கூடியிடிருந்த
120 பேரும் பரிசுத்த ஆவியானவரால்
அக்கினி நாவுகளில் மேல்வீட்டறையில் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஞானஸ்நானம் என்றால் கிரேக்கத்தில் BAPTIZO என எழுதியிருப்பார்கள். வேதத்தில் இந்த வார்த்தையே எழுதப்பட்டுள்ளது. அது முழுகுதல் – Immersion என்று அர்த்தம்.
இதன் மெய்யான கருத்து “திரவத்தில் அமிழ்த்து, முழுக்கு, மூழ்கிப்போ” என்பதாகும்.

இயேசு கிறிஸ்து யோர்தான் நதி தண்ணீரிலிருந்து எழுந்தார் என்றுள்ளது. ஆதலால் மூழ்கி எழுந்து ஞானஸ்நானம் பெற்றார். முன்னுதாரணமாக அருளினார்.

நீங்கள் தண்ணீரில் மூழ்கி மரித்து மீண்டும் உயிர்தெழுந்து மேலே வரும்போது இயேசு கிறிஸ்து நம்மை புதிதாய் பிறந்த குழந்தையாகப் பார்க்கிறார். என்ன ஒர் அரிய நிகழ்வு! !

கலாத்தியர் 3:27
உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே


Share this page with friends