எனக்கு அழகில்லை, திறமை இல்லை, பணம் இல்லை, வாகனம் இல்லை என்பவர்கள் இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்

எனக்கு அழகில்லை, திறமை இல்லை, சாதிக்க பணம் இல்லை, பிண்னணியம் இல்லை, நல்ல வாகனம் இல்லை என எதைஎதையோ சொல்லி பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். இந்த வீடியோவை உற்று பாருங்கள். இவருக்கு சொல்லிக்கும் அளவில் பெலனில்லை, நம்மைபோல் நடக்கும் திறனில்லை, சூழ்ந்து நின்று மாஸ் காட்ட ஒருவரும் இல்லை. சட்டத்தை மதித்து வாயில் மாஸ்க் இருப்பதால் வாய் திறந்து பேச வாய்ப்பும் இல்லை. ஆனால் நல்ல மனமிருக்கிறது. கிரியையில் நல்ல குணமிருக்கிறது. யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருக்கிறது. பெலனில்லாத கால்களில் வேதாகம பெட்டியை சுமந்து கொண்டு, மனதை வலிமையாக்கி சிரமங்களிடையே இரு கரமும் கர்த்தருக்காய் பாடுபடுகிறது. கண்கள் அங்கும் இங்கும் ஆத்துமாக்களை தேடுகிறது.
மீண்டும் மீண்டும் இந்த வீடியோவை பார்க்கிறேன். இவரை ரசிக்க அல்ல. என்னை சிந்திக்க..
ஒரு நிமிடம் உங்களை சிந்தித்து விட்டு உங்கள் உணர்வுபூர்வமான கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி