பரிபூரணமானவைகள் : பிரசங்க குறிப்புகள்
பிரசங்க குறிப்பு: “பரிபூரணமானவைகள்”
அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படிஉன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும் உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச்செய்வார்.
உபாக : 30 : 9
இந்தக் குறிப்பில் பரிபூரணம் என்ற வார்த்தையை முக்கியபடுத்தி இதை கவனிக்கலாம். எப்படிப்பட்டபரிபூரணம் என்றும் , இந்த பரிபூரணத்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்
- பரிபூரணமான விளைச்சல் ஆதி : 41 : 29
- பரிபூரணமானநன்மை உபாக : 28 : 11
- பரிபூரணமானஆனந்தம் சங் : 16 : 11
- பரிபூரணமானசத்தியம் எரே : 33 : 6
- பரிபூரணமான சந்தோஷம் 2 கொரி : 7 : 4 , 8 : 2
பரிபூரணத்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ?
- பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ள தேவனுடைய சத்தத்திற்க்கு செவி கொடுக்கவேண்டும் உபாக : 28 : 11 — 31
- பரிபூரணத்தை பெற்றுக்கொள்ள தேவனை உண்மையாக சேவிக்க வேண்டும்
உபாக : 28 : 47 - பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ள உண்மையானவர்களாக இருக்க வேண்டும்
நீதி : 28 : 20 - பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ள மறுதலிக்காமிலிருக்க வேண்டும்
நீதி : 30 : 9 - பரிபூரணத்தைப்பெற்றுக்கொள்ளதேவ சமூகத்தை நாட வேண்டும்
சங் : 16 : 11
இந்தக் குறிப்பில் பரிபூரணத்தைக் குறித்து சிந்தித்தோம் எப்படிப்பட்ட பரிபூரணமென்றும், இந்தப் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இதில்
சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu Tirupur
Tirupur